சீவக சிந்தாமணி 2011 – 2015 of 3145 பாடல்கள்
2011. யாப்பு உடை யாழ் மிடறு என்னும் தோட்டியால்
தூப்புடை அவள் நலம் தொடக்கும் பாகனாய்
மூப்பு எனும் முக படாம் புதைந்து முற்றிழை
காப்பு உடை வள நகர் காளை எய்தினான்
விளக்கவுரை :
2012. தண்டு வலியாக நனி தாழ்ந்து தளர்ந்து ஏங்கிக்
கண்டு கடை காவலர்கள் கழற முகம் நோக்கிப்
பண்டை இளங் கால் உவப்பன் பால் அடிசில் இந்நாள்
கண்டு நயந்தார் தருவ காதலிப்பன் என்றான்
விளக்கவுரை :
[ads-post]
2013. கையின் தொழுதார் கழிய மூப்பின் செவி கேளார்
மையலவர் போல மனம் பிறந்த வகை சொன்னார்
பைய நடக்க என்று பசிக்கு இரங்கி அவர் விடுத்தார்
தொய்யில் முலையவர்கள் கடைத் தோன்றல் நனிபுக்கான்
விளக்கவுரை :
2014. கோதையொடு தாழ்ந்து குழல் பொங்கி ஞிமிறு ஆர்ப்ப
ஓத மணி மாலையொடு பூண் பிறழ ஓடி
ஏதம் இது போமின் என என்னும் உரை ஈயான்
ஊத உகு தன்மையினொடு ஒல்கி உற நின்றான்
விளக்கவுரை :
2015. கச்சு விசித்து யாத்த கதிர் முலையர் மணி அயில் வாள்
நச்சு நுனை அம்பு சிலை நடுங்க உடன் ஏந்தி
அச்சம் உறுத்து அமுது புளித்து ஆங்குத் தம தீஞ்சொல்
வெச்சென்றிடச் சொல்லி விரி கோதை அவர் சூழ்ந்தார்
விளக்கவுரை :




