சீவக சிந்தாமணி 1951 – 1955 of 3145 பாடல்கள்
1951. வேல் நெடுங் கண்கள் அம்பா வில் படை சாற்றி எங்கும்
தேன் நெடுங் கோதை நல்லார் மைந்தனை தெருவில் எய்ய
மான் நெடும் மழைக் கண் நோக்கி வானவர் மகளும் ஒப்பாள்
பால் நெடுந் தீம் சொல்லாள் பாவை பந்து ஆடுகின்றாள்
விளக்கவுரை :
1952. குழல் மலிந்த கோதை மாலை பொங்க வெம் கதிர்ம் முலை
நிழல் மலிந்த நேர் வடம் நிழல்படப் புடைத்தர
எழில் மணிக் குழை வில் வீச இன் பொன் ஓலை மின் செய
அழல் மணிக் கலாபம் அம் சிலம்பொடு ஆர்ப்ப ஆடுமே
விளக்கவுரை :
[ads-post]
1953. அங்கை அம் தலத்தகத்த ஐந்து பந்து அமர்ந்தவை
மங்கை ஆட மாலை சூழும் வண்டு போல வந்து உடன்
பொங்கி மீது எழுந்து போய்ப் பிறழ்ந்து பாய்தல் இன்றியே
செங்கயல் கண் புருவம் தம்முள் உருவம் செய்யத் திரியுமே
விளக்கவுரை :
1954. மாலையுள் கரந்த பந்து வந்து கைத் தலத்த ஆம்
ஏல நாறு இரும் குழல் புறத்த வாள் முகத்த ஆம்
நூலின் நேர் நுசுப்பு நோவ உச்சி மாலை உள்ள ஆம்
மேல் எழுந்த மீ நிலத்த விரல கைய ஆகுமே
விளக்கவுரை :
1955. கொண்டு நீங்கல் கோதை வேய்தல் குங்குமம் அணிந்துராய்
எண் திசையும் ஏணி ஏற்று இலங்க நிற்றல் பத்தியின்
மண்டிலம் வரப் புடைத்தல் மயிலின் பொங்கி இன்னணம்
வண்டும் தேனும் பாட மாதர் பந்து மைந்துற்று ஆடுமே
விளக்கவுரை :




