சீவக சிந்தாமணி 2066 – 2070 of 3145 பாடல்கள்
2066. களநக்க கண்ணிக் கமழ் பூங் குழல் கரும்புஏர் தீம் சொலாள் கதிர் முலைகளின்
வண்ணககு வானும் நிலனும் எல்லாம் விலையே மழை மின்னும் நுசுப்பினாளைப்
பெண்ணுக்கு அணியாக வேண்டி மேலைப் பெரியோர் பெருமான் படைத்தான் என்று
புண் நக்க வேலான் புகழ நாணிப் பூ நோக்கிப் பூக்கு ஒசிந்த கொம்பு ஒத்தாளே
விளக்கவுரை :
2067. இறங்கிய மாதர் தன்னை எரி மணிக் கடகக் கையால்
குறங்கின் மேல் தழுவி வைத்துக் கோதை அம் குருதி வேலான்
அறம் தலை நீங்கக் காக்கும் அரசன் யான் ஆக நாளைச்
சிறந்த நின் நலத்தைச் சேரேனாய் விடின் செல்க என்றான்
விளக்கவுரை :
[ads-post]
2068. வில் இடு மணி செய் ஆழி மெல் விரல் விதியின் கூப்பி
நல் அடி பணிந்து நிற்ப நங்கை நீ நடுங்க வேண்டா
செல்க எனச் சிலம்பு செம் பொன் கிண்கிணி மிழற்ற ஒல்கி
அல்குல் காசு ஒலிப்ப ஆயம் பாவை சென்று எய்தினாளே
விளக்கவுரை :
2069. பருமணிப் படம் கொள் நாகப் பை எனப் பரந்த அல்குல்
எரி மணிப் பூணினானுக்கு இன் நலம் ஒழிய ஏகித்
திருமணிச் சிவிகை ஏறிச் செம்பொன் நீள் மாடம் புக்காள்
விரி மணி விளங்கும் மாலை வெம் முலை வேல் கணாளே
விளக்கவுரை :
2070. திருவில் தான் மாரி கற்பான் துவலை நாள் செய்வதே போல்
உருவிற்றாய்த் துளிக்கும் தேறல் ஓங்கு தார் மார்பன் தோழர்
பொருவில் தான் நம்பி காம திலகன் என்று இருந்த போய்தில்
செருவில் தாழ் நுதலினாள்கண் மணத்திறம் செப்பு கின்றார்
விளக்கவுரை :




