சித்த வைத்திய அகராதி 10601 – 10650 மூலிகைச் சரக்குகள்
பேய்வரளிச்செடி – ஆற்றலரிசெடி
பேய்வாதுமை – கசப்புவாதுமை மரம்
பேய்வெங்காயம் – நரிவெங்காயம்
பேய்வெருட்டிச்செடி – கிலுகிலுப்பைச்செடி
பேய்வெள்ளரிக் கொடி – கசப்புவெள்ளரிக் கொடி
பேய்வேனிக் கொள்ளு – பேய்க்கொள்ளுச் செடி
பேரகத்திமரம் – அகத்திமரம்
போகம் – சோளம்
பேரண்டம் – தலையோடு
போதிமரம் – பெருமரம்
பேரத்திமரம் – அத்திமரம்
பேரத்திதித்தட்டை – பேய்க்கரும்புத்தட்டை
பேரரத்தை – தும்புராஷ்டகம்
பேரவச்செடி – நரிவழுக்கை செடி
பேரவுரி – நீலவுரிச்செடி
பேரறுகு – யானையறுகுப்புல்
பேராமல்லி – பேராமுட்டிச் செடி
பேராமுகிச்செடி – பெருந்தும்பை
பேராமுட்டி – குரவிச்சிப் பூண்டு
பேரிகிச்செடி – பேய்த்துவரைச் செடி
பேரிக்காய் – அம்பளங்காய்
பேரிகச்செடி – வட்டத்திருப்பிச் செடி
பேரிகாச்சோளம் – வெண்சோளம்
பேரிஞ்சுமரம் – பேரிச்சமரம்
பேரிந்துமரம் – பேரிஞ்சுமரம்
பேரிராச்செடி – சீனச்செடி
பேருடைமரம் – பெரியவுடைமரம்
பேரேலம் – ஏலம்
பேர்க்கசிக்கொடி – கட்டுக்கொடி
பேர்க்கரிக்கிழங்கு – புளிநறளைக் கிழங்கு
பேலிகச்செடி – காட்டுக்கத்தரி
பைங்கழைமரம் – மூங்கில்மரம்
பைங்கூலிகப்புல் – பசும்புல்
பைசாசக்காளான் – பேய்க்காளான்
பைசாசத்துத்தி – பேய்த்துத்தி
பைசாசத்தும்புலாமரம் – பேய்த்தும்புலாமரம்
பைசாசத்தும்புலிச் செடி – தூம்புரவாலிச்செடி
பைசாசத்தும்பைச்செடி – பேய்த்தும்பைச்செடி
பைசாசத்தூரிதச்செடி – பேயூமத்தைச்செடி
பைசாசநெல் – மலைநெல்
பைசாசமுள்ளிச்செடி – காட்டுமுள்ளிச்செடி
பைசாசிமாஞ்சில் – சடாமாஞ்சில்
பைதிருதிக் கொடி – கொடிச்சம்பங்கி
பைந்தினை – கருந்தினை
பைந்தீலிச்செடி – பேய்ச்சுண்டைச்செடி
பைமாசுப் பழம் – பம்பளிமாசுப் பழம்
பைம்பேயகக்கொடி – பேய்ச்சீந்திற்கொடி
பைம்பொன்மல்லிகைமரம் – பொன்னூமத்தைச் செடி
பைம்பொன்னரளிமரம் – தங்கரளிமரம்
பைரவமரம் – பேயகத்தி மரம்




