HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 7251 - 7300 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7251 – 7300 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7251 – 7300 மூலிகைச் சரக்குகள்

செம்பருந்துக்கொடி – கருடன்கொடி
செம்பிச்சுக்கொடி – செந்தொட்டிச்செடி
செம்புத்தொட்டிப்பாஷாணம் – சோரபாஷாணம்
செம்புலம் – சுடுகாடு, மயானம்
செம்புளிச்சக்கீரை – சிவப்புப்புளிச்சக்கீரை
செம்புனல் – இரத்தம், உதிரம்
செம்பெடுக்குஞ்சரக்குகள் – அயம், காந்தம், துருசு, கெந்தி,
காரம், வங்கம், நாகம், குடவன்
செம்பேரிகமூலி – கீரிமூலி
செம்பைமரம் – சித்தகத்திமரம்
செம்பைமாலினிச்செடி – சிவப்பாதளைச்செடி
செம்பொடுதலை – சிவப்புப்பொடுதலைக்கொடி
செம்பொன்மரம் – தங்கரளிமரம்
செம்மட்டிரம் – மரமஞ்சள்
செம்மணக்காதிச்செடி – செவ்வாமணக்குச்செடி
செம்மணத்தக்காளி – சிவப்புமணத்தக்காளிச்செடி
செம்மனத்தாவிகச்செடி – செந்தொட்டிச்செடி
செம்மணத்திமரம் – செம்மரம்
செம்மணிக்கொடி – செங்குன்றிமணிக்கொடி
செம்மந்தாரை – சிவப்புமந்தாரை மரம்
செம்மந்திராய்ச்செடி – செந்திராய்ச்செடி
செம்மரம் – அழிஞ்சில்மரம்
செம்மராகிதமரம் – செந்நெல்லிமரம்
செம்மருதோன்றிமரம் – சிவப்புமருதோன்றிமரம்
செம்மரோசிதமுள்ளிச்செடி – நீர்முள்ளிச்செடி
செம்மலாவிரைச்செடி – ஆவிரைச்செடி
செம்மறியாட்டுப்பால் – செம்பிலியாட்டுப்பால்
செம்மாதிசக்கரந்தை – செங்கரந்தைச்செடி
செம்மானரளி – ரோஜாவரளி
செம்மிகித்தண்டு – செங்கீரைத்தண்டுச்செடி
செம்முள்ளங்கி – சிவப்புமுள்ளங்கிச்செடி
செம்முள்ளாகிச்செடி – காட்டுமுள்ளிச் செடி
செம்முள்ளிக்கீரை – குப்பைமுள்ளிக்கீரைச்செடி
செயபரமஞ்சள் – மரமஞ்சள்
செயபீதபாஷாணம் – கெளரிபாஷாணம்
செயலைமரம் – அசோகுமரம்
செயல்முகக்கொடி – கல்லாரைக்கொடி
செருக்கமரம் – மாதளைமரம்
செருக்கன்வேலிச்செடி – கொடிவேலிச்செடி
செருந்திகாச்செடி – மணத்தக்காளிச்செடி
செருப்படை – சிறுசெருப்படைக்கொடி
செலக்குலவங்கம் – கெந்தகமாஞ்சில்
செலதங்கிழங்கு – கோரைக்கிழங்கு
செலமலம் – கடற்பாசி
செலமாதிதமரம் – கெட்டிவஞ்சிமரம்
செலியம் – செவ்வியம்
செலியாமப்பாசி – கொட்டைப்பாசி
செலுசுமரம் – நறுவிலிமரம்
செல்லிக்கொட்டை – நேர்வாளம்
செவிரகப்பாசி – நீர்ப்பாசி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments