சித்த வைத்திய அகராதி 7201 – 7250 மூலிகைச் சரக்குகள்
செந்தாடுபாவை – சேந்தாடுபாவை
செந்தாதிமரம் – செம்பூவரசுமரம்
செந்தாமரைப்பூ – சிவப்புத்தாமரைப்பூ
செந்தாமிய நெல்லிமரம் – செந்நெல்லிமரம்
செந்தாழைமரம் – சொந்தாழைமரம்
செந்தாளி – தாளிக்கொடி
செந்திரா – சிவப்புத்திராக்கொடி
செந்திருவுச்செடி – துளசிச்செடி
செந்தினை – சிவப்புத்தினை
செந்தீவண்ணன்செடி – சிவதுளசிச்செடி
செந்துமாஞ்சில் – சடாமாஞ்சில்
செந்துமிமரம் – செம்மரம்
செந்தும்பைச்செடி – சிவப்புத்தும்பைச்செடி
செந்துரசமூலி – மலைதாங்கிப்பூண்டு
செந்துருக்கன்செடி – தூம்புரவாலிச்செடி
செந்துலாமணக்குச்செடி – செவ்வாமணக்குச்செடி
செந்துவரைமதம் – சிவப்புத்துவரைமரம்
செந்துளளசி – சிவப்புத்துளசி
செந்துளிர்மேனிக்கொடி – கம்மாறுவெற்றிலைக்கொடி
செந்தூதுவளைக்கொடி – சிவப்புத்தூதுவளைக்கொடி
செந்தூபிகக்கொடி – செப்புநெருஞ்சிற்கொடி
செந்தூரஞ்செய்யுங்காலம் – பங்குனி, சித்திரை
செந்தூரம் – இலிங்கபாஷாணம்
செந்தொட்டிச்செடி – சிறுகாஞ்சொறிச்செடி
செந்தொயிலிக்கீரை – தொயிலிக்கீரை
செந்தோன்றிப்பூ – கார்த்திகைப்பூ
செந்நகரைப்பட்டை – செந்தகரைப்பட்டை
செந்நாகதாளி – சிவப்புநாகதாளிச்செடி
செந்நாகிப்பட்டை – செங்கத்தாரிப்பட்டை
செந்தாக்குறட்டை – மூக்குறட்டைச்செடி
செந்நாசியாம்பற்கொடி – செவ்வாம்பற்கொடி
செந்நாயுருவி – சிவப்புநாயுருவி
செந்தாரகிமரம் – செம்மரம்
செந்நாரைமரம் – சிவப்பு நாரைமரம்
செந்நாலினிப்பழம் – செவ்வாழைப்பழம்
செந்நாவிக்கிழங்கு – சிவப்புநாவிக்கிழங்கு
செந்நீர் – இரத்தம், உதிரம்
செந்நீர்முள்ளி – சிவப்புநீர் முள்ளிச்செடி
செந்நெல் – மட்டைநெல்
செந்நெல்லிமரம் – சிவப்புநெல்லிமரம்
செபத்திராமரம் – உருத்திராக்கமரம்
செப்பிகாமாஞ்சில் – சடாமாஞ்சில்
செப்பிடாப்பரத்ததை – செம்பரத்தைச்செடி
செப்புநெருஞ்சிற்கொடி – சிறுநெருஞ்சிற்கொடி
செப்புகிப்புல் – நாணற்புல்
செம்பசளைக்கொடி – சிவப்புப்பசளைக்கொடி
செம்பச்சிப்பட்டை – வேம்பாடம்பட்டை
செம்பரத்தஞ்செடி – சிவாம்பரத்தஞ்செடி
செம்பரிகாச்செடி – செம்பரத்தஞ்செடி
செம்பருத்திச்செடி – குங்குமப்பருத்திச்செடி




