HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4931 - 4935 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4931 – 4935 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4931 – 4935 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4931. எண்ணியே நாதாந்த
சித்துதாமும் யெழிலான மூலியது சென்றபேர்க்கு
கண்ணமுடன் ஞானமென்ற
குளிகைதன்னால் தகமையுடன் தான்பார்க்கும்
வேளைதன்னில்
வண்ணமுடன் கரும்பசுவும்
மலையோரத்தில் மார்க்கமுடன் தினந்தோறும் மேய்ந்துமல்லோ
புண்ணியனார் சித்துமுனி
வைத்தமூலி புகழான காயாதி கற்பந்தின்னலாச்சே
விளக்கவுரை :
4932. தின்னவே காயாதி கற்பமூலி
நீரமுடன் எந்தனுக்கு வாய்த்ததாலே
மன்னவனார் தேவாதி
சித்துதாமும் மார்க்கமுடன் விட்டகுறை இருந்ததாலே
பன்னவே காயாதி கற்பமூலி
பாங்குடனே வாய்த்துதென்று மனதிலுன்னி
தென்பொதிகைத் தனிலமைந்த
கதையைப்போலும் தேவனது கடாட்சமதால்
வாய்க்கலாச்சே
விளக்கவுரை :

[ads-post]
4933. ஆச்சென்று கரும்பசுவும் மனதிலெண்ணி ஆண்மைகொண்டு இருக்குமந்த காலந்தன்னில்
மூச்சடங்கி தானிருக்கும்
மாயாசித்து முனையான கரும்பசுவைத் தன்னைப்பார்த்து
மாச்சலென்ற சினமதுவு மதிகமாகி
மகத்தான சாபமது கொடுத்தபோது
கூச்சலுடன் கரும்பசுவும்
மண்ணில்வீழ்ந்து கொப்பெனவே யலறியல்லோ விழுகலாச்சே
விளக்கவுரை :
4934. விழுந்துமே காராவும்
கதறும்போது விருப்பமுடன் கன்றதுவும் ஓடிவந்து
அழுதுமே காராவைத்தான்முகந்து
அலறியே பசளையென்ற மூலிதன்னை
தொழுதுமே சித்துமுனி
பாதந்தன்னில் துப்புறவாய் வாய்தனிலே யூட்டும்போது
பழுதுபடா சித்துமுனி
மனதுவந்து பான்மையுடன் விசனமது கொண்டிட்டாரே
விளக்கவுரை :
4935. கொண்டுமே மனக்கவலை யதிகமாகி
குவலயத்தில் பசுதனையே கொன்றதாலே
விண்டுமே பாவமது நேரலாச்சு
வீண்பழிக்கு ஆளாகினோம் விண்ணிலப்பா
துண்டரிகமானதொரு கோபத்தாலே
துப்புறவாய் விசனமது வதிகமாகி
பண்டுளவு மாலையணி
கிருஷ்ணபூபன் பட்சமுடன் தான்வளர்த்த கோவுமாமே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments