சித்த வைத்திய அகராதி 10051 – 10100 மூலிகைச் சரக்குகள்
புலிமரப்பால் – வேங்கைமரப்பால்
புலியுகிலிச்செடி – புலிதொடக்கிச்செடி
புலிராகிப்பூண்டு – புல்நகப்பூண்டு
புல் – பசுமூலிகைப்புல்
புல்லகச்சிக்கிழங்கு – சேமக்கிழங்கு
புல்லகண்டக்கரும்பு – பேய்க்கரும்பு
புல்லரிசி – காட்டுப்புல்லரிசி
புல்லவமரம் – சிறுநவ்வல்மரம்
புல்ல்hந்திச்செடி – பூலாஞ்செடி
புல்லாமகக்கிழங்கு – சேசகனார்கிழங்கு
புல்லாமணக்கு – வழியாமணக்கு
புல்லிகமரம் – சிறுதேக்குமரம்
புல்லியக்கிழங்கு – புளிநறளைக்கிழங்கு
புல்லுநீர் – விந்துநீர்
புல்லுருவிப்பூண்டு – மரவொட்டிப்பூண்டு
புல்லூகிப்பூடு – திகைப்பூடு
புல்லூதியமரம் – பனைமரம்
புல்லூரி – கல்லூரிச்செடி
புல்லூரிப்புல் – ஒட்டுப்புல்
புவிதவிருக்கம் – பெருவாகைமரம்
புவியாட்பூரம் – இரசகற்பூரம்
புழுக்காதிக்கொடி – ஆடுதின்னாப்பாளைக்கொடி
புழுக்கைப் பட்டை – சனகிப்பட்டை
புழுக்கைபழம் – ஈச்சம்பழம்
புழுக்கொல்லிப்பாளை – ஆடுதின்னாப்பாளைக் கொடி
புழுங்கலரிசி – வெந்தநெல்லரிசி
புழுதின்குடோரி – ஆடாதோடைச் செடி
புழப்பகச்செடி – மூக்குறண்டிச்செடி
புளப்பாகலரிசி – வாலுளுவையரிசி
புளவைப்பருத்தி – பட்டுப்பருத்தி
புளிக்கரணைக் கிழங்கு – புளியம்பிரண்டைக் கிழங்கு
புளிச்சகாக்கீரை – புளியாரைக்கீரை
புளிச்சக்கீரை – வெண்புளிச்சக்கீரை
புளிச்சாங்கொடி – புளிப் பிச்சான்கொடி
புளிச்சிறுறுகீரை – புளியாரைக்கீரை
புளிச்சேபிதக் கொட்டை – புளியங்கொட்டை
புளித்தகரை – தகரைச்செடி
புளித்திராய்ப்பூடு – பம்பந்திராய்ப்பூடு
புளிநரளைக்கிழங்கு – புளியம்பிரண்டைக் கிழங்கு
புளிந்தகச்செடி – புலி தொடக்கிச்செடி
புளிப்பிரண்டை – புளியம்பிரண்டை
புளிப்பிராகியம் – புளியம்பூ
புளிப்பிராணி – புளியம்பட்டை
புளிபபிராதிக் கிழங்கு – சேனைக் கிழங்கு
புளிப்பிலந்தைச்செடி – புளியிலந்தைச்செடி
புளிப்புக்கீரை – புளிச்சைக்கீரை
புளிப்புக்குஞ்சிதக்காய் – புளியங்காய்
புளிப்புக்கொடி மாதளை – புளிக்கொடிமாதளை
புளிப்புக்கொடிமாதிரம் – கொம்மட்டிமாதளைச்செடி
புளிப்புக்கொடிமுந்திரி – புளிக்கொடிமுந்திரி





