HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5116 - 5120 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5116 – 5120 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5116 – 5120 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5116. பாண்மையாம் இவ்வித்தை
யறிந்துமைந்தா பாங்கான ராஜரிடஞ் சென்றாயானால்
தேன்போன்ற ஜாலமதை
மிகவாய்ச்செய்து தேற்றமுடன் அவர்மனது களிப்புண்டானால்
மேன்மையாம் உந்தனுக்கு
வேணதீவார் மேதினியில் உனைப்போல சித்தருண்டோ
பாண்மையுடன்
சிவராஜயோகஞ்செய்து பாலிப்பாய் வெகுகோடி வித்தைதாமே
விளக்கவுரை :
5117. வித்தையால் ஜெகஜால வித்தையப்பா விருப்பமுடன் உந்தனுக்கு உபதேசித்தேன்
சுத்தமுடன் ஞானோபதேசவித்தை
சூட்சாதி சூட்சமெல்லாம் திறந்துவிட்டேன்
நித்தமுமே மதியமுர்தம்
நிலையம்பூண்டு நீணிலத்தில் நீயுமொரு சித்தனைப்போல
கத்தனையே எந்நாளுமனதிலெண்ணி
கைலாயபதிபோல வாழ்ந்திடாயே
விளக்கவுரை :

[ads-post]
5118. வாழவென்றா லின்னமொரு
மார்க்கம்பாரு வளமான வித்தையது கருதானப்பா
தாழவே புலிப்பாணி மைந்தாகேளு
தகமையுள்ள கண்மணியே புகல்வேன்பாரு
வேழமையாய் தேவதைகள்
கூட்டத்தோடும் வெகுமாண்பருக்கோசை தன்னினோடும்
சாழலெனு மோசையது முறிந்துபோக
சட்டமுடன் யாமுரைப்போம் வளமைகாணே
விளக்கவுரை :
5119. காணவே பேயோட்டு மந்திரவாதி
கனமான பத்துபேர் மாண்பர்கூடி
தோணவே சிலம்பங்கள்
போடும்போது துப்புரவாய்க் கூச்சலுடன் போரேவந்தால்
வேணவே மர்மங்கள்
மனதிற்கொண்டு வேட்கையுடன் வுடுக்கைதனை யுடைப்பதற்கு
நாணவே கெந்தகத்தின்
திராவகத்தால் நலமாக குச்சிதன்னிற் கோடுபோடே
விளக்கவுரை :
5120. போடேதான் எதிராளி
காணாமற்றான் போக்கான திராவகத்தைத் தீட்டும்போது
நீடவே சவ்வென்ற சர்மந்தானும்
நிட்களங்கமாகவல்லோ வெந்துமேதான்
கூடவே யிருக்குமந்த
காலந்தன்னில் கொப்பெனவே யெதிராளி வந்துமல்லோ
சாடவே யுடுக்கைதனை
யடிக்கும்போது சட்டமுடன் உடுக்கதுவும் கிழியுந்தானே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments