HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 7801 - 7850 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7801 – 7850 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7801 – 7850 மூலிகைச் சரக்குகள்

தாரம் – அரிதாரம்
தாரவக்கொடி – கொடிமுந்திரிக்கொடி
தாருகதலிமரம் – வாழைமரம்
தாருகாக்கியக்கொடி – மஞ்சளவரைக்கொடி
தாருசக்கீரை – செம்புளிச்சக்ரை
தாருணாகிக்கீரை – மயிலிக்கீரை
தாருணிச்செடி – நத்தைச்சூரிச்செடி
தாருணீகமரம் – மரவீழிமரம்
தார்மரம் – சீனமரம்
தார்விகமரம் – பிராய்மரம்
தாலபத்திரி – மஞ்சள்
தாலபாஷாணம் – தாலம்ப பாஷாணம்
தாலபோதவிரை – ஆவிரை
தாலபோதிதக்கொடி – கோழியவரைக்கொடி
தாலமரம் – கூந்தற்பனைமரம்
தாலமாதிதவரிசி – கோதுமையரிசி
தாலமூலிக்கிழங்கு – நிலப்பனைக்கிழங்கு
தாலவச்சிரமரம் – மலைநாரத்தைமரம்
தாலிகக்காய்ச்செடி – கீழ்காய்நெல்லிச்செடி
தாலியச்செடி – கீழ்காய் நெல்லிச்செடி
தாலியமரம் – பாதிரிமரம்
தாலுகண்ணிக்கொடி – வெண்காக்கணத்திக்கொடி
தாலுகத்தைச்செடி – காட்டுமுள்ளிச்செடி
தாவணியக்கொடி – கண்டங்கத்திரிக்கொடி
தாவயமரம் – மலைமுருங்கைமரம்
தாழைமரம் – வெண்தாழைமரம்
தாழ்வரிக்கீரை – கோழிக்கீரை
தாளக பாஷாணம் – மால்தேவிபாஷாணம்
தாளபத்திரம் – தாளிப்பனை
தாளிகக்கொடி – இலட்சுமிக்கொடி
தாளிசநெய் – பலநெய்
தாளிசபத்திரி – சிவபத்திரி
தாளிப்பனை – கூந்தற்பனை
தாளிமாருடமரம் – சரக்கொன்றைமரம்
தாளினிச்செடி – நிலவாகைச்செடி
தாளினித்துத்தி – கொடித்துத்தி
தாளினிவேர் – சிவதைவேர்
தாளேசமரம் – கொன்னைமரம்
தாறுகண்ணிக்கொடி – வெண்காக்கணத்திக்கொடி
தானகமல்லி – கொத்தமல்லி
தானியராஜன் – கோதும்பை
தான்றிமரம் – தானிமரம்
திகசச்செடி – அசமதாகச்செடி
திகந்தக்கிழங்கு – சேனைக்ழங்கு
திகனாதிச்செடி – கொடுவேலிச்செடி
திகிரிகாவலன் – கோரோசனை
திகிரிமரம் – மூங்கில்மரம்
திகேசமரம் – முல்லைக்குருந்துமரம்
திகைப்பூடு – மனமயக்கிப்பூண்டு
திகைப்பூடடிரவிரை – கஞ்சாவிரை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments