HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5486 - 5490 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5486 – 5490 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5486 – 5490 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5486. கூட்டியே பச்சையென்ற
பூரந்தானும் கூறான காந்தமது தானுஞ்சேர்த்து
மாட்டியே வாஞ்சிநேயர்
பலத்தினாலே மார்க்கமுடன் தானரைப்பாய் நாலுசாமம்
வாட்டமுடன் தானரைத்து
சிமிளில்வைத்து வளமாக கஸ்தூரி புனுகுசேர்த்து
நாட்டமுடன் கரந்தனிலே
பூசிமைந்தா நலமாக ஸ்ரீதலையில் பூசிடாயே
விளக்கவுரை :
5487. பூசியே நசிமசியென்றேயோது
புகழான கருவதுவும் வுருவுமேறி
மாசிபடா மனத்துவங்
கலங்கியேதான் மகத்தான சிந்தனையுமதிகமாகி
ஆசியுடன் வரும்போது
மைந்தாகேளு வப்பனே வாத்மஜலங்கூடச்சேர்த்து
வாசியுடன் வுருவதும்
லட்சமோது வரையுடனே பெண்ணுருவாய் வருவாள்பாரே
விளக்கவுரை :

[ads-post]
5488. வருவாளே மோகமது கொண்டுமல்லோ
மகத்தான நிதியனைத்து மீவாள்பாரு
உருகியே மனமதுவும்
மிகவும்வாடி உத்தமனே யுன்பின்னே துடறுவாள்பார்
கருகியே முகம்வேர்த்து
மனம்வேறாகி கட்டழகி பொன்மாது வருவாள்பாரு
திருவினையாள் மனோன்மணியாள்
முன்னேநிற்பாள் திரமுடனே அஷ்டசித்தி
கைக்குள்ளாச்சே
விளக்கவுரை :
5489. ஆச்சப்பா கமலமுனி யனந்தம்போக்கு வப்பனே சொல்லிவைத்தார் லக்கோயில்லை
மூச்சடங்கி வையகத்திற்
சென்றுமேதான் மூதுலகில் திரும்பிவந்து கண்டபின்பு
பேச்சொடுங்கி சிலகாலஞ்
சமாதிநின்று பேரின்ப நிலைதனிலே யிருந்துகொண்டு
பாச்சலுடன் சிடிகையென்ற
வேதைகோடி பலபலவாய் பாடிவைத்தார் கமலர்தானே
விளக்கவுரை :
5490. தானான வித்தையது
யதிகஞ்சொன்னார் தண்மையுடன் காலாங்கி வித்தைக்கொவ்வா
கோனான யெனதையர்
காலாங்கிநாதர் கொட்டினார் இதுபோல சிடிகைவேதை
தேனான மனோன்மணியாள்
கிருபையாலே தெரிவித்தே னுந்தனுக்கு சொன்னேனப்பா
பானான வித்தையெல்லாங்
கூறப்போனால் பாங்கான வேழாயிரம் இடங்கொள்ளாதே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments