HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5326 - 5330 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5326 – 5330 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5326 – 5330 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5326. காய்ந்தபின்பு தனையெடுத்து
ஓட்டிலிட்டு கசகாமல் சீலையது வலுவாய்ச் செய்து
தோய்ந்துமே வராகமென்ற
புடத்தைப்போடு துப்புறவாய்ப் புடமாறி எடுத்துப்பாரு
மாய்ந்துமே வெடியுப்புச்
சத்துருவுஞ் சேர்ந்து மகத்தான பற்பமது யென்னசொல்வேன்
தீய்ந்ததொரு பற்பமதை
யெடுத்துமைந்தா திறமான சீசாவிற் பதனம்பண்ணே  
விளக்கவுரை :
5327. பண்ணவே ரவிதனையே
யெடுத்துநீயும் பான்மையுடன் தானுருக்கி ராசமீவாய்
எண்ணவே செம்புக்கு பாதியீவர்
யெழிலான பற்பமதை யென்னசொல்வேன்
உண்ணவே சோறுதின்ன
வேண்டுமென்றால் வுத்தமனே செம்புசுத்தி போதாதேதான்
வண்ணமுடன் செம்பதனை யுருக்கி
மைந்தா மகதேவர் கவசகுண்டலஞ் செய்வாயே
விளக்கவுரை :

[ads-post]
5328. செய்யவே சிவயோகி வேடம்பூண்டு
தேசத்தோர் நண்பருக்கு யிந்தவேதை
உய்யவே தான்கொடுக்க
மனுதர்மமாகும் வுத்தமனே சமுசாரிக்கான வித்தை
துய்யதொரு செம்புவித்தை
யிதுதானப்பா துப்புரவாய் கலசகுண்டலத்துக்காதி
பையவே யுந்தமக்கு
வுபதேசிப்பேன் பாங்குபெற கர்மிகட்கு சொல்லாரன்றே
விளக்கவுரை :
5329. சொல்லான சொல்லிதுதான் சிவவேடந்தான்
துப்புரவா யிருப்போர்க்கு ஈயநன்று
புல்லான மாண்பர்களில்
தர்மிகளுமுண்டு புகழான தருமிகட்கு ஈயநன்று
கல்லான கருமிகளுக்கு
கொடுக்கலாகா கபடன்றி மெய்சொல்லுவோர் குடுக்கநன்று
வல்லதொரு சித்துமுனி
வேதையப்பா வளமையுடன் செய்பவர்க்கு சித்தியாமே
விளக்கவுரை :
5330. சித்தியா மின்னமொரு
பாகஞ்சொல்வேன் சிறப்பான நாதாக்கள் சொன்னதில்லை
முத்திபெற கடுகளவு
ரசமேநின்றால் முனையான மோசமது பெறவேயாகும்
சத்திசிவம் சூதமதிற்
காணலாகும் தாரிணியில் கண்டவனே வாதியாவான்
வெற்றிபெற கெந்தகமும்
பலமைந்தாகும் விருப்பமுடன் பூநாகம் பலமைந்தாமே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments