HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5331 - 5335 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5331 – 5335 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5331 – 5335 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5331. ஆமேதான் லிங்கமது
பலமைந்தாகும் வப்பனே எரிகாலன் பாலாலாட்டி
தாமேதான் கோளாறு நேரிடாமல்
காட்சியுடன் ரவிதனிலே காயப்போடு
வேமேதான் மறுபடியும்
பொடியாய்ச் செய்து விருப்பமுடன் செய்யுமந்த முறைமைக்கேளு
நாமேதான் மதியதுவுந்
துலமுறாம் நன்மையுடன் செய்யுகின்ற வரிசைகேளே
விளக்கவுரை :
5332. கேளப்பா வெள்ளிதனை
குகையிலிட்டு கெவனமுடன் வுருக்கியல்லோ செப்பக்கேளு
தூளப்பா முன்சொன்ன
மருந்தையல்லோ துப்புரவாய்க் கிரசமது யீவாய்தானும்
நாளப்பா போகாமல் மூசைதன்னை
நலம்பெறவே வுடைத்துப்பார் களங்கேயாகும்
பாளப்பா போகாமல் களங்குதன்னை
பட்சமுடன் தானெடுத்து செப்பக்கேளே
விளக்கவுரை :

[ads-post]
5333. செப்பவென்றால் நாவில்லைப் பாவுமில்லை ஜெகந்தனிலே ரசிதமென்ற குளிகையாச்சு
ஒப்பமுடன் குளிகைதனை
யெடுத்துப்பூபா வுத்தமனே கலசமதில் சூதமிட்டு
தப்பிதங்கள் நேராமல்
சூதந்தன்னில் தகமையுடன் குளிகைதனை கலசத்திலிட்டு
ஒப்பனையாம் வாய்மூடி
சீலைசெய்து வுத்தமனே நெருப்பதனிற் காச்சிடாயே
விளக்கவுரை :
5334. காச்சியே கலசமதைத்
திறந்துபாரு கனமான சூதமது வெண்ணைப்போலாம்
ஆச்சரிய மானதொரு சூதவித்தை
வப்பனே யாரறிவார் மாண்பரப்பா
கூச்சலுடன் தானொடுங்கி
சூதந்தானும் கொற்றவனே கீழ்நிற்கும் வெண்ணெய்தானும்
பாச்சலுடன் குளிகையது
மேலேநிற்கும் பண்பான குளிகைதனை பதனம்பண்ணே
விளக்கவுரை :
5335. பண்ணவென்றால் சூதவெண்ணெய்
தானெடுத்து பட்சமுடன் காந்தமென்னும்
மூசைதன்னை
எண்ணவே தானடைத்து சீலைசெய்து
யெழிலாகத் தானுருக்கி யெடுத்துப்பாரு
நண்ணவே வானத்து மீன்தானப்பா
நலமான வெள்ளியது என்னசொல்வேன்
திண்ணமுடன் வெள்ளிதனை
சிவயோகஞ்செய்து சித்தனைப்போல் தானிருந்து
வருந்திடாயே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments