HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5596 - 5600 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5596 – 5600 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5596 – 5600 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5596. வாக்கான வாக்கதுவும் அறிந்தஜாதி வளமான நயமென்ற பாஷைதன்னை
நோக்கமுடன் தானறியும்
மிருகஜாதி நுண்மையுடன் மார்பதனில் நகருஞ்சாதி
ஏர்க்கவே ஜாதியது பேதாபேதம்
எழிலாகத் தாமுரைப்பேன் வண்மைபாரு
தீர்க்கமுடன் பூமிதனில்
நகருஞ்சாதி திறமான காலில்லா ஜாதிதானே
விளக்கவுரை :
5597. தானான ஜாதிவகை சொல்வேன்கேளு
தயவான புலிப்பாணி மைந்தாபாரு
தேனான பூமிதனில் விஷமுள்ள
ஜெந்து தேசத்தில் அறிவுள்ள ஜெந்தொன்றப்பா
மானான மாணிக்கப்
பாம்பேயல்லால் மற்றதொரு ஜெந்துக்கள் யாதொன்றில்லை
பானான வையகத்தில் கோடியுண்டு
பாலகனே வாலகாலப் பாம்பாகாதே
விளக்கவுரை :

[ads-post]
5598. ஆகாது பரிபாஷைத்
தெரிந்தபாம்பு வப்பனே யாரறிவார் மண்டலத்தில்
சாகாது கோடியுக
மிருக்கும்பாம்பு சர்ப்பராஜனென்றல்லோ பேருண்டாச்சு
வேகாது
காடுதீப்பட்டெரிந்தால் வேகமுடன் ஆகாயம்பறக்கும்பாம்பு
போகாது சிறகுடைய சர்ப்பமல்லோ
பொங்கமுடன் கண்டறிந்த பாம்புதானே
விளக்கவுரை :
5599. பாம்பான மற்றதோர் ஜீவஜெந்து
பாரினிலே எத்தனையோ கோடியுண்டு
தீம்பான ஜெந்துக்கள்
வையகத்தில் தரளான கணக்குவகை கூறப்போமோ
வீம்புடனே சீவவதை
செய்திட்டாலும் வித்தகனே யதற்கொன்றும் தெரியாதப்பா
ஆம்பலுடன் கொட்டியவர்
மலர்தல்போலும் வப்பனே யவனிதனி லதிகமுண்டே
விளக்கவுரை :
5600. உண்டான புலிப்பாணி
மைந்தாபாரு உத்தமனே இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன்
கண்டதொரு வையகத்தில்
விருட்சந்தன்னில் காலாங்கி நாதரவர் அறிந்தமட்டும்
அண்டமதில் ஆகாயதேவரெல்லாம்
வன்புடனே யுகந்துகொண்ட விருட்சந்தன்னை
சண்டமாருதம்போல
விருட்சந்தன்னை சாற்றுகிறேன் புலிப்பாணி மைந்தாபாரே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments