HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5591 - 5595 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5591 – 5595 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5591 – 5595 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5591. ஒண்ணவே சிலதேச மாண்பரப்பா
வுத்தமனே அந்தவண்ணன் முகமுமாகும்
எண்ணவே முடியாது ஜாதிபேதம்
எழிலான பேதமது லக்கோயில்லை
கண்ணவே சாதியது பதினெட்டாக
காசினியில் அவதரித்தார் கோடிமாண்பர்
எண்ணவே முடியாது
யாராலுந்தான் எழிலான ஜாதியிட மார்க்கந்தானே
விளக்கவுரை :
5592. மார்க்கமா மின்னமொரு
மகிமைகேளு மகத்தான புலிப்பாணி மைந்தாபாரு
ஓர்க்கவே ஜாதியது பேதாபேதம் எழிநூற்றிருபத்தினாலுசொச்சமாகும்
மூர்க்கமாம் மாண்பரோடு
பேசும்பட்சி முனையான முப்பத்திரெண்டேஜாதி
ஆர்க்கவே பரிபாஷை தெரிந்த
பட்சி வப்பனே சோடசமும் ஜாதிபதினாறே
விளக்கவுரை :

[ads-post]
5593. ஆறான பட்சியது அனந்தமுண்டு
அதுதனக்கு குணாகுணபேதமில்லை
நூறான
வாண்டுக்குளிருக்கும்பட்சி நுண்மையுடன் கலைகள் பதினாறதாகும்
நூறான மற்றதோர்
பட்சியெல்லாம் துப்புரவாய் வயததுவுங் கொஞ்சமாகும்
தேறான மற்றதோர் பட்சிக்கப்பா
தேசத்தில் பகுத்தறிவு இல்லைதானே
விளக்கவுரை :
5594. தானான மிருகத்தின்
வளப்பஞ்சொல்வேன் தண்மையுள்ள புலிப்பாணி மைந்தாகேளு
கோனான எனதையர் காலாங்கிநாதர்
கொற்றவனார் குருபாத கடாட்சத்தாலும்
தேனான மனோன்மணியாள்
கடாட்சத்தாலும் தேசமெல்லாம் குளிகையது பூண்டுகொண்டு
மானான மிருகத்தின்
மகுத்துவத்தை மண்டலத்தில் கண்டறிந்து வந்தேன்பாரே
விளக்கவுரை :
5595. பாரேதான் மிருகத்தின்
வளப்பஞ்சொல்வேன் பாங்கான மனோலயத்தை யறிந்தஜாதி
நேரேதான் மிருகமது
சோடசமாகும் நேர்மையுடன் ஜாதியது பதிணாரேயாகும்
சீரேதான் மிருகமது
பரிபாஷைபேசும் சிறப்பான மற்றதோர் மிருகமெல்லாம்
வேரேதான் பகுத்தறிவு
யில்லையப்பா வேதாந்தக் காலாங்கி யருள்வாக்காச்சே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments