HomeUncategorizedஅகப்பேய் சித்தர் பாடல்கள் 81 - 85 of 90 பாடல்கள்

அகப்பேய் சித்தர் பாடல்கள் 81 – 85 of 90 பாடல்கள்


அகப்பேய் சித்தர் பாடல்கள் 81 – 85 of 90 பாடல்கள்
           
81. ஒப்பனை யல்லவடி                        அகப்பேய்
          உன்னாணை சொன்னேனே
அப்புட னுப்பெனவே                             அகப்பேய்
          ஆராய்ந் திருப்பாயே.
விளக்கவுரை :
           
82. மோட்சம் வேண்டார்கள்                   அகப்பேய்
          முத்தியும் வேண்டார்கள்
தீட்சை வேண்டார்கள்                           அகப்பேய்
          சின்மய மானவர்கள்.
விளக்கவுரை :
           
83. பாலன் பிசாசமடி                            அகப்பேய்
          பார்த்தால் பித்தனடி
கால மூன்றுமல்ல                                அகப்பேய்
          காரிய மல்லவடி.
விளக்கவுரை :
           
84. கண்டது மில்லையடி                       அகப்பேய்
          கண்டவ ருண்டானால்
உண்டது வேண்டடியோ                         அகப்பேய்
          உன்னாணை சொன்னேனே.
விளக்கவுரை :
           
85. அஞ்சையு முண்ணாதே                   அகப்பேய்
          ஆசையும் வேண்டாதே
நெஞ்சையும் விட்டுவிடு                       அகப்பேய்
          நிஷ்டையிற் சாராதே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments