HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 101 - 150 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 101 – 150 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 101 – 150 மூலிகைச் சரக்குகள்

அங்காரி – வெங்காரம்
அங்காரி கைத்தட்டை – கரும்பு
அங்குசநீறு – பூநீறு
அங்குசநேமிச்செடி – கருந்துத்தி
அங்குசபாதிச்செடி – சிறுபுள்ளடி
அங்குசபிசாரி – கொள்ளு
அங்குசபோசகக் கொடி – கருந்தட்டைப் பயற்றுக்கொடி     
அங்குசமரம் – வாழைமரம்         
அங்குசமாதிதச்செடி – கருந்துவரைச்செடி       
அங்குசம் – காந்தம், பூநீறு       
அங்குசயோதனம் – கருந்தினை      
அங்குசரோசனி – கூகைநீறு            
அங்குசலாவிகம் – கருந்துத்தி      
அங்குசவிச்செடி – காணச்செடி      
அங்குசைத்தும்பைச்செடி – கருந்தும்பைச்செடி           
அங்குசோலி – அறுகு         
அங்குடாகினி – கருப்புக் கடுகு ரோகணி       
அங்குணம் – வெங்காரம்        
அங்குரி – விரல்                  
அங்கை – உள்ளங்கை         
அங்கோலமரம் – அழிஞ்சில்மரம்             
அங்கோலமாசகமரம் – கரும்புரசு      
அங்கோலவைரவ மரம் – அழிஞ்சில் மரம்    
அசகணாகமரம் – கருந்துவரை      
அசகண்டச்செடி – தைவேளை       
அசகாமிகக் கொடி – கருமொச்சைக்கொடி      
அசட்டி – அசமதாகம், ஓமம்       
அசப்பு – சடுதி, சீக்கிரம்               
அசமதாகம் – ஓமம்          
அசமநாகி – குரோசாணியோமம்      
அசமந்திரமரம் – மலையத்திமரம்     
அசமாருதமரம் – அத்திமரம்               
அசமேலிகச்செடி – கருப்பம்மான் பச்சரிசிச்செடி
அசமோதம் – ஓமம்
அசமோதாதிகச்செடி – கருப்பறுகுச்செடி     
அசம் – வெள்ளாடு         
அசம்பவம் – சூனியம்         
அசராதிமரம் – கொன்றைமரம்      
அசவாகிகம் – கருப்புக்கசகசா       
அசனபன்னி – சித்தகத்திமரம்
அசனபாணிகச்செடி – கருப்புப்பாவட்டைச்செடி
அசனப்பூடு – வெள்ளைப்பூடு
அசனவேதி – சீரகம்
அசனிமரம் – அணிச்சைமரம்
அசனோபத்தாரை மரம் – கருப்பு மந்தாரைமரம்
அசன்றிகாச்செடி – தைவேளைச்செடி
அசாகமரம் – அரசமரம்
அசாணிமூலிக்கொடி – உத்தமதாளிக்கொடி
அசிதகருணிச்செடி – கருப்புவழுதலைச் செடி
அசிதாம்புருகம் – நீலோற்பலப்பூ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments