சித்த வைத்திய அகராதி 10301 – 10350 மூலிகைச் சரக்குகள்
பூறுகக்கிழங்கு – தண்ணீர்விட்டான் கிழங்கு
பூனைக்காஞ்சொரி – பூனைக்காலிக்கொடி
பூனைக்காரிகப்புல் – பூனைப்புல்
பூனைக்காலி – பூனைக்காஞ்சொரிக் கொடி
பூனைப்பகைச் செடி – குப்பைமேனிச் செடி
பூனைப்பீஷன் – பூனையண்டக்கொடி
பூனைப்புலிமரம் – சுக்குநாறிமரம்
பூனைப்புல் – எலிப்புலிப்புல்
பூனைப்பூசிணிக்கொடி – வெள்ளைப் பூசணிக்கொடி
பூனைப்பூண்டு – எலிவிஷப்பூண்டு
பூனைப்பேரிகவிருட்சம் – சுணங்கவிருட்சம்
பூனைமுட்குறண்டிச்செடி – பூனைக்குறண்டிச்செடி
பூனைமூலிச்செடி – குப்பைமேனிச்செடி
பூனையண்டக்கொடி – பூனைப்பீஷன்கொடி
பூனையாதரப்புல் – பூனைப்புல்
பூனைவணங்கிச்செடி – குப்பைமேனிச் செடி
பூனையண்டக் கொடி – பூனைப்பீஷன்கொடி
பூனையாகாப்புல் – பூனைப்புல்
பூனைவணங்கிச் செடி – குப்பைமேனிச் செடி
பூனைவித்து – பூனைக்காலிவிரை
பெட்டிவெல்லம் – பனைவெல்லம்
பெட்டேகச்செடி – செந்தக்காளிச்செடி
பெண்டுகக்கொடி – கழற்சிக்கொடி
பெண்ணகச்செடி – நீர்முள்ளிச் செடி
பெண்ணமுதமூலி – கொட்டைக் கரந்தைச்செடி
பெண்ணரசுக்கொடி – அல்லிக்கொடி
பெண்ணழுக்கு – ருதநீரு
பெண்ணாகிசச் செடி – தக்காளிச்செடி
பெண்ணைமரம் – பனைமரம்
பெண்ணோட்டப்பயறு – நரிப்பயறு
பெண்துடரி – பின்துடரிச்செடி
பெண்நீர் – சிறுபெண்நீர், ருதுநீர்
பெண்பனைமரம் – காய்ப்பனைமரம்
பெண்பாகசமரம் – செம்மருதோன்றிமரம்
பெத்தணத்திச்செடி – பேதனத்திச்செடி
பெத்தமூலச்செடி – சிறுவழுதலைச் செடி
பெத்தற்குரும்பை – பெருங்குரும்பை
பெத்தனத்திச்செடி – பேதனத்திச்செடி
பெத்திகைக்கத்திரி – பெருமுள்ளிக் கத்திரி
பெந்திபேகச்செடி – சிறுநிலீசெடி
பெப்பர்மெண்டுச்செடி – சீனத்துச் செடி
பெயர்சொல்லாதது – வசம்பு
பெயர்த்தலக்கொடி – பாலாந்தெள்ளுக்கொடி
பெயாதனமரம் – வேங்கைமரம்
பெரிய அறுகு – யானை அறுகு
பெரியஆவிரை – ஆவரைச்செடி
பெரியஎழுத்தாணிப் பூண்டு – எழுத்தாணிப்பூண்டு
பெரியஏலம் – நாட்டேலம்
பெரியசாலிமரம் – சாலிமரம்
பெரியசிவப்பம்மான் பச்சரிசி – பெருஞ்சிவப்பம்மான் பச்சரிசி




