சித்த வைத்திய அகராதி 10401 – 10450 மூலிகைச் சரக்குகள்
பெருங்கையானீர் – ஐங்காயநீர்
பெருங்கொடிமுந்திரி – முந்திரிக்கொடி
பெருங்கொடிமூலி – தலைகுருளிக்கொடி
பெருங் கொத்தவரை – நீட்டக் கொத்தவரைச் செடி
பெருங்கொய்யா – சிவப்புக்கொய்யா மரம்
பெருங்கொழுமிச்சை – கடற்கொழுஞ்சிமரம்
பெருங்கொன்னை – குளோப்புக்கொன்னை மரம்
பெருங்கோவகாப்புல் – சோதிப்புல்
பெருங்கோவக்கொடி – செங்கோவைக்கொடி
பெருங்கோவிகாக்சொடி – கோவைக் கொடி
பெருங்கோழிதம் – முத்தக்காசு
பெருஞ்சாரணைக்கிழங்கு – மூக்கரைச்சாரணைக் கிழங்கு
பெருஞ்சிமிட்டி – பீதகசிமிட்டி
பெருஞ்சிருங்கி – ஆட்டுச்செவிக் கள்ளி
பெருஞ்சிலும்பான் – மாட்டுக்சிலும்பான்
பெருஞ்சிவதை – கருஞ்சிவதை
பெருஞ்சின்னி – சீதசின்னிச்செடி
பெருஞ்சீகிகம் – சோம்பு
பெருஞ்சீரகம் – சோம்பு
பெருஞ்சூலிமரம் – மருட்சூலி மரம்
பெருஞ்சூலினி – அகச்சூலிமரம்
பெருஞ்செண்பகமரம் – சிவப்புச் செண்பகமரம்
பெருஞ் செந்திராய்ப்பூண்டு – செந்திராய்ப்பூண்டு
பெருஞ்செந்தொட்டி – பெருங்காஞ்சொறிச்செடி
பெருஞ்செப்புத் தொட்டிப் பாஷாணம் – சிவப்புத்தொட்டிப் பாஷாணம்
பெருஞ்செம்பரத்தை – அலங்காரச் செம்பாத்தாஞ்செடி
பெருஞ்சொப்பான்மரம் – சாலிமரம்
பெருஞ்செருப்படை – வட்டச் செருப்படை
பெருநகக்கொன்றை – நரிக்கொன்னைமரம்
பெருநவ்வல்மரம் – நவ்வல்மரம்
பெருநறுவிளிமரம் – விருசமரம்
பெருநன்னாரிக்கொடி – மாகாளிக் கொடி
பெருநாக்குப்பூச்சி – சிறுப்பூச்சி
பெருநாங்கில்மரம் – சடைநாங்கில் மரம்
பெருநாங்குலிகமரம் – பெருநாங்கில் மரம்
பெருநாரத்தைமரம் – கடாநாரத்தைமரம்
பெருநீர் – கடல்நீர் – சமுத்திரநீர்
பெருநெருஞ்சிற் செடி – யானைநெருஞ்சிற்செடி
பெருந்தகரைச்செடி – தகரைச்செடி
பெருந்தக்காளிச்செடி – தக்காளிச் செடி
பெருந்தராச்செடி – திராய்ப்பூண்டு
பெருந்தாளிக்கொடி – மலைத்தாளிக் கொடி
பெருந்திப்பிலி – யானைத்திப்பிலி
பெருந்தும்பை – தும்பைச்செடி
பெருந்துறட்டிச்செடி – சூரஞ்செடி
பெருந்தெல்லு – யானைத்தெல்லு
பெருந்தேசிக்காய் – கொடிஎலுமிச்சங்காய்
பெருந்தேட்கொடுக்கு – வெந்தேட்கொடுக்குச் செடி
பெருந்தோடைச்செடி – ஆடாதோடைச் செடி
பெருமரம் – பீநாறி மரம்




