HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 10751 - 10800 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10751 – 10800 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10751 – 10800 மூலிகைச் சரக்குகள்

போத்திரிச்செடி – வெள்ளரிசெடி
போந்துகமரம் – பனைமரம்
போந்துகாத்தினை – மஞ்சட்தினை
போந்துகாப்பீர்க்கு – நுரைப்பீர்க்கங்கொடி
போம்பறிச்செடி – நீர்க்கடம்பு
போம்பனிச்செடி – மருவுச்செடி
போல்மூங்கில்மரம் – குழாய்மூங்கில்மரம்
போளம் – கரியபோளம்
போற்குன்றிமணி – வரிக் குண்டுமணி
போற்றணிக்கொடி – நிலப்பூசணிக் கொடி
பௌண்டிரவக்கொடி – பாஞ்சாலிக்கொடி
பௌதிகமங்கைச்செடி – பொன்னாங்கண்ணிச் செடி
பௌத்தர தாமரை – குளிர்தாமரை
பௌத்திரத்தினை – மஞசட்தினை
பௌத்திரநெல்லிமரம் – அரிநெல்லிமரம்
பௌத்திரப்புல் – கருப்பைப்புல்
பௌத்திராபோளம் – வாளேந்திரபோளம்
பௌத்திராமுருங்கை – புனல்முருங்கைச்செடி
பௌத்திராயக் கொடி – செந்திராய்க் கொடி
பௌத்திராவச்செடி – ஊதளைச்செடி
மகரகந்தம் – வெண்காயம், ஈரவெங்காயம்
மகரசமரம் – மருதோன்றி மரம்
மகாசிதமரம் – கொன்னைமரம்
மகரதச்செடி – கொடுவேலிச்செடி
மகரந்தப்பூ – மனோரஞ்சிதப்பூ
மகரந்திகாமரம் – தேமாமரம்
மகரவாழை – மொந்தவாழை மரம்
மகரவீரிச்செடி – சேம்புச்செடி
மகரவேதிகவரிசி – வாலுளுவையரிசி
மகாதசமரம் – மாவுலிங்கமரம்
மகாதிம்பமரம் – பெருமரம்
மகாநங்கைச்செடி – மிளகாய்நங்கைச் செடி
மகாநாரிமரம் – ஈரபுன்னைமரம்
மகாநீலச்செடி – கையாந்தகரைச் செடி
மகாபலக்கொடி – தூதுவளைக் கொடி
மகாபலச்செடி – பேராமுட்டிச் செடி
மகாபலமரம் – கொழுமிச்சைமரம்
மகாபலிகக்கொடி – வெண்பூசணிக்கொடி
மகாபலைமரம் – வில்வமரம்
மகாபூசிதசீரம் – பெருஞ்சீரகம்
மகாபூசுரபிமரம் – புன்னைமரம்
மகாமகவிருட்சம் – கற்பகவிருட்சம்
மகாமேதைச்செடி – மருளுமத்தைச்செடி
மகாரசிதகாரம் – மிளகு
மகாரசிதமரம் – மாமரம்
மகாரவுப்பு – கல்லுப்பு
மகாவலிமரம் – வில்வமரம்
மகாவியவீழிமரம் – விருசுமரம்
மகாவிருத்தக்கள்ளி – சதுரக் கள்ளி
மகாவினிதச் செடி – பேராமுட்டிச்செடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments