சித்த வைத்திய அகராதி 11001 – 11050 மூலிகைச் சரக்குகள்
மதுரமரம் – முந்திரிமரம்
மதுரம் – அதிமதுரம்
மதுரரசமரம் – பனைமரம்
மதுரவள்ளிக்கிழங்கு – சருக்கரைவள்ளிக்கிழங்கு
மதுரவேர் – அதிமதுரம்
மதூகமரம் – இலுப்பைமரம்
மதூகமலர் – இலுப்பைப்பூ
மதூலிகம் – அதிமதுரம்
மதூலிகாமரம் – மாமரம்
மதூலிகாரிகம் – தேன்பாக
மத்தகஜக்கொடி – கட்டுக்கொடி
மத்தங்காய்ப்புல் – மத்தம்புல்
மத்தங்கோரைப்புல் – பாய்க்கோரைப்புல்
மத்தச்செடி – ஊமத்தைச்செடி
மத்தப்புடற்கொடி – பன்றிப்புடற்கொடி
மத்தமேதிகமரம் – பலாவீழிமரம்
மத்தனிகாச்செடி – மருக்காரைச்செடி
மத்தனிகாச்செடி – மருக்காரைச்செடி
மத்தாகிக் கூடு – தேன்மெழுகு
மத்தாகிதம் – தேன்
மத்தாடிச்செடி – கருவூமத்தைச்செடி
மத்திகப்பூ – சிறுநாகப்பூ
மத்திகாமரம் – பருத்திமரம்
மத்திபகந்தமரம் – மாமரம்
மத்திமகூர்மை – திலாலவணம்
மந்தாரகமரம் – மந்தாரைமரம்
மந்தாரமஞ்சிகம் – சூதபாஷாணம்
மந்தாரிகமரம் – முள்முருங்கைமரம்
மந்தாரை மரம் – செம்மந் தாரைமரம்
மந்திஷ்டி – மஞசிஷ்டி
மந்திராய்ப்பூடு – கச்சந்திராய்ப்பூடு
மந்திரினி – கருமானம்
மந்திரினிமை – கருமானமை
மந்தைப்பெருச்சாளி – தூதுவளைக்கொடி
மந்தைவாசிவேர் – கருஞ்சிவதை வேர்
மமதையடக்குமூலி – கருந்தேன், பெண்மூலம்
மமதையுண்டாக்கு மூலி – வெள்ளைத்தேன், ஆண்மூலம்
மம்மத்திரிச்செடி – சிற்றாமுட்டிச்செடி
மம்மாதகிச்செடி – தேட்கொடுக்குச்செடி
மம்மாதிகம் – மாங்கிஷபேதி
மயானப்பூடு – அஸ்தி, எலும்பு
மயிடவிருட்சம் – எருமைவிருட்சம்
மயிர்மாணிக்கங்கொடி – அழகுக்கொடி
மயிலடிக்குருந்து – நூலாங்குருந்துமரம்
மயிலமேனிச்செடி – குப்பைமேனிச்செடி
மயிலாசகச்செடி – தொழுகண்ணிச்செடி
மயிலாடுக்குருந்து – மயிலாடிக்குருந்து
மயிலாத்திக் கொடி – இலாமிச்சைவேர்
மயிலியச்செடி – செம்பருத்திசெடி
மயிலைச்செடி – இருவாட்சிச்செடி




