சித்த வைத்திய அகராதி 11351 – 11400 மூலிகைச் சரக்குகள்
மாமுனிகிச்செடி – நாயுருவிச்செடி
மாம்பழம் – மாவின்பழம்
மாயகாவிரை – வெள்ளரிவிரை
மாயோன்விந்து – வெள்ளி
மாய்கைமரம் – ஆச்சாமரம்
மாரண்டம் – பாம்புமுட்டை
மாரம் – கோடகசாலை
மாரனிடுக்கி – போகம், சேருதல்
மார்க்கசிச்செடி – கையாந்தகரைச்செடி
மார்ச்சாலம் – பூனை
மார்த்தாண்டச்செடி – எருச்கஞ்செடி
மாலதிமரம் – சிறுசெண்பகமரம்
மாலதீயமரம் – பேரிஞ்சமரம்
மாலமரம் – குங்குமமரம்
மாலயக்கொடி – மிளகுசாரணைக்கொடி
மாலுகமரம் – வேப்பமரம்
மாலூகமரம் – பொந்தம்புளி மரம்
மாலூங்கச்செடி – புளிமாதுளைச்செடி
மாலூரமரம் – வில்வமரம்
மாலூர்திக்கொடி – கருடன்கிழங்குக்கொடி
மாலையம்பூமரம் – உதிர்பன்னீர் மரம்
மால்கரந்தைச்செடி – விஷ்ணுகரந்தைச்செடி
மால்கொடைத்துளசி – செந்துளசிச் செடி
மால்சந்தனமரம் – அரிசந்தனமரம்
மால்தாயக்கிழங்கு – கருநெய்தற்கிழங்கு
மால்துயில்விருட்சம் – ஆலமரம்
மால்தேவி – அரிதாரம்
மால்பரிதி – சரிரக்கொழுப்பு
மாவகமரம் – இலுப்பைமரம்
மாவச்சமரம் – அச்சமரம்
மாவச்சிரமரம் – குங்குமமரம்
மரவள்ளிக்கிழங்கு – ஆள்வள்ளிக் கிழங்கு
மாவிதை – மாம்பருப்பு
மாவிலிமரம் – மாவுலிங்கமரம்
மாவிளமரம் – விலவமரம்
மாவின்காய் – மாங்காய்
மாவுலாதிகச்செடி – பொற்றலைக்கரிப்பான் செடி
மாவுலிங்கமரம் – பூந்தாதுமரம்
மானிகை – சாராயம்
மான்செவிக்கள்ளி – மான்காதுக்கள்ளிச்செடி
மான்சேவிகம் – கஸ்தூரி
மான்நாச்செடி – சீனச்செடி
மான்நாவிக்கிழங்கு – கலப்பைக் கிழங்கு
மான்முதமூரி – கஸ்தூரி
மான்மாதவச்செடி – மான்குளம்படிச்செடி
மிகுண்டக்கொடி – சாரணைக்கொடி
மிகுண்டாகிதம் – பெரும்பூனைக் காலிக்கொடி
மிகுத்திகாமரம் – வில்வமரம்
மிகுற்திராமூங்கில் – பெருமூங்கில் மரம்
மிகுந்திகிக்கிழங்கு – தண்ணீர்விட்டான் கிழங்கு




