சித்த வைத்திய அகராதி 1151 – 1200 மூலிகைச் சரக்குகள்
ஆட்டுசச்செடி – ஆடாதோடை
ஆட்டுசாகிசமரம் – மலையெருக்கிலை மரம்
ஆட்டுச்செவிக்கள்ளி – ஆட்டுக்காதுக்கள்ளி
ஆட்டுத்துழாய்ச்செடி – காட்டுத்துளசிச்செடி
ஆட்டுலாமரம் – முடவாட்டுக்கால்
ஆட்டூரவேம்புமரம் – மலைவேம்பு
ஆணகக்கொடி – சுரைக்கொடி
ஆணகங்காய் – ஆண்பனையின் காய்
ஆணவபாஷாணம் – கோளக பாஷாணம்
ஆணாகவரைச்செடி – ஆவாரை
ஆணிப்பூடு – அமளைப்பூடு
ஆண்குறிப்பாஷாணம் – லிங்க பாஷாணம்
ஆண்சாரிகச்செடி – மனமுருகி
ஆண்செருப்படை – சிறு செருப்படை
ஆண்டகப்பூ – மனோரஞ்சிதப்பூ
ஆண்டலைமரம் – அரசமரம்
ஆண்டிரவாழைமரம் – மலைவாழை
ஆண்டைச்செடி – தேட்கொடுக்கு
ஆண்துடரிச்செடி – விரகச்செடி
ஆண்பனைமரம் – காயாப்பனைமரம்
ஆண்மதப்பூ – மதனப்பூ
ஆண்மரம் – அழிஞ்சில்மரம்
ஆதகாமிகமரம் – மாங்கிளுவை
ஆதகுமரம் – கூந்தற்பனைமரம்
ஆதகேரகச்கொடி – மாட்டுக் குளம்படிக்கொடி
ஆதண்டைக்கொடி – காத்தட்டி
ஆதம்பாச்செடி – மாதேவிச்செடி
ஆதம்பேதிக்கொடி – செம்பு நெருஞ்சிற்கொடி
ஆதவமரம் – கொன்றைமரம்
ஆதளைச்செடி – காட்டாமணக்கு
ஆகாரண்டம் – முதுகெலும்பு
ஆதிகச்செடி – சிறுகுறிஞ்சா
ஆதிகாரகச்செடி – மாமாலைச்செடி
ஆதிக்குரு – பூவழலை
ஆதிச்சரக்கு – சூதம்
ஆதித்தன் – சூரியன்
ஆதிநாராயணன்மூலி – விஷ்ணு கரந்தை
ஆதிபரக்காய் – சாதிக்காய்
ஆதிமருந்து – சுக்கு, மிளகு,திப்பிலி
ஆதியாமப்புல் – மூகைப்புல்
ஆதிவிந்து – நிலப்பாஷாணம்
ஆதிவிராகபாஷாணம் – சோர பாஷாணம்
ஆதிவிராசக்கள்ளி – மான்செவி
ஆதிவிராட்டியம் – வெள்ளைப் பாஷாணம்
ஆதுலம் – கள், பனங்கள்
ஆதொண்டைக்கொடி – காத்தட்டிக் கொடி
ஆத்தசக்கொடி – மொச்சை
ஆத்தரளிச்செடி – ஆற்றாளி
ஆத்திகக்கனி – அத்திப்பழம்
ஆத்திஷ்டிச்செடி – நீர்முள்ளி




