HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 11651 - 11700 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 11651 – 11700 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 11651 – 11700 மூலிகைச் சரக்குகள்

முள்ளங்கத்திரிச்செடி – காரற்கத்திரிச்செடி
முள்ளங்கிக் கிழங்கு – வெண்முள்ளங்கிக்கிழங்கு
முள்ளிக்கத்திரி –  பிதுர்க்கத்திரி
முள்ளிக்காய் – முள்ளிக்கத்தரிக்காய்
முள்ளிக்கீரை – வெண்முள்ளிக்கீரைச்செடி
முள்ளிச்சிவப்புக்கீரை – குப்பைமுள்ளிக் கீரைச்செடி
முள்ளிச்செடி – சிவப்புநீர் முள்ளிச்செடி
முள்ளி மூலம் – நீர்முள்ளிவேர்
முள்ளிலவமரம் – பேயிலவமரம்
முள்ளிலவிக மரம் – கோங்கிலவ மரம்
முள்ளில்லாக் கற்றாழை – நாகபடக்கற்றாழை
முள்ளிற்கச்சிகமரம் – கொழுமிச்சைமரம்
முள்ளுக்கத்திரி – முட்கத்திரி
முள்ளுக்கொடிச்சிக்கொடி – தூதுவளைக்கொடி
முள்ளுமுருங்கைமரம் – சிவப்புமுள்ளு முருங்கைமரம்
முள்ளுவெள்ளரிக்கொடி – முட்கந்திரிக் கொடி
முறைமயக்கிச்செடி – குப்பைமேனிச்செடி
முறைமூலமரம் – திப்பிலிநவ்வல் மரம்
முற்கூலக்கொடி – திரளங்கொடி
முனிமரம் – அகத்திமரம்
முனிமூத்திரவுப்பு – சமுத்திர கல்லுப்பு
முன்றுடரிக்கொடி – துடரிக்கொடி
முன்னங்கேயச் செடி – பிடங்குநாறிச்செடி
முன்னமரம் – முன்னைமரம்
முன்னாகக்கொடி – பிள்ளைதாட்சிக் கொடி
முன்னைமரம் – பசுமுன்னைமரம்
மூகைச்சாரிச்செடி – மயூரச்சிகைச்செடி
மூகைப்புல் – முயற்புல்
மூகையலரிமரம் – மரஅலரிமரம்
மூக்கரைச்சாரணை – வெண்மூக்கரைச்சாரணைக் கொடி
மூக்காங்கன் விரை – புத்திரசீலி விரை
மூக்கிகம் – வசம்பு
மூக்கிலழகிமரம் – குமிழ்மரம்
மூக்கிலாமொக்கு – மராட்டிமொக்கு
மூக்குக்காவலமரம் – புரசுமரம்
மூக்குத்திக்காய்க்கொடி – மருதளங்காய்க் கொடி
மூக்குத்திப்பூண்டு – கூத்தக்குதம்பைச்செடி
மூக்குத்தூள் – புகையிலைப்பொடி
மூக்கோலவரிசி – புழங்கலரிசி
மூங்கில்மரம் – கணுமூங்கில்மரம்
மூசாந்தக்கொடி – வெண்டாமரைக்கொடி
மூசாந்திகமரம் – மரவீழிமரம்
மூசாம்பரம் – சீனிச்சரக்கு
மூசாலை – சோம்பு
மூடனம் – மிளகு
மூடிக்கரை – எலிச்செவிக்கீரை
மூட்டைகொல்லிச்செடி – சிறுதும்பைச்செடி
மூட்டைதூக்கிக்கொடி – முடக்கத்தான்கொடி
மூட்டைநாறிச்செடி – ஓமவல்லிச்செடி
மூதண்டகண்ணிக்கொடி – தூதுவளைக்கொடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments