சித்த வைத்திய அகராதி 12401 – 12450 மூலிகைச் சரக்குகள்
வார்மூலி – பூநீறு, வெடியுப்பு
வாலகேகயப்பட்டை – கொஞ்சிப் பட்டை
வாலபத்திரமரம் – கருங்காலிமரம்
வாலபாகிக மரம் – மொந்தன்வாழைமரம்
வாலானரிசி – வீரியத்தரிசி
வாலிகைக்கீரை – கொடிக்காசரைக்கீரை
வாலுங்கிக்காய் – கக்கரிக்காய்க் கொடி
வாலுவித்தேக்கு – மோதகத்தேக்கு மரம்
வாலுளுவையரிசி – வாலானாசி
வாலூகம் – விஷம்
வாலேந்திரபோளம் – வெண்போளம்
வாலைசாரம் – சத்திச்சாரம்
வாலைநீர் – வழலைநீர் , திராவகம்
வால்மிளகு – ஔதசியமிளக
வால்மீகமரம் – மராமரம்
வால்மீகிச்சோறு – புற்றான்சோறு
வாழகிகம் – குந்துருக்கம்
வாழகிச்சாரணை – வட்டச்சாரணைக்கொடி
வாழ்புளப்பிச்செடி – முல்லைச்செடி
வாழ்மகியரசு – புண்ணியவரசு மரம்
வாழ்னாதிக்கொடி – தூதுவளைக்கொடி
வாழைமரம் – கதலிமரம்
வாழ்மடந்தை – அரிதாரம்
வாளம் – நேர் வாளம்
வாளவருவி – குடியிருப்போர்
வாளவரைக்கொடி – வெள்ளையவரைக் கொடி
வாளாகக்கொடி – கொடிமுல்லை
வாற்கோதுமையரிசி – பார்லியரிசி
வானகிநீர்ச்சாதம் – மோர்ச் சாதம்
வானக்கெந்தி – கெந்தகம்
வானத்திமிறி – தைலம்
வானபத்திரமரம் – பலாமரம்
வானபாசியமரம் – இலட்சைக்கெட்ட மரம்
வானப்பிராதீதமரம் – இலுப்பை மரம்
வாமுட்டி மரம் – நெட்டிலிங்கமரம்
வானவல்லிக்கொடிடி – மின்னிக்கொடி
வானவுப்பு – வெடியுப்பு
வானாசிப்பூ – ரோஜாப்பூ
வானாவியரிசி – கார்போகவரிசி
வான்கொடி – ஆகாயவல்லிக்கொடி
வான்மீகச்சோறு – புற்றாஞ்சோறு
வான்மிகப்பூ – குங்குமப்பூ
வான்முட்டிமரம் – நெட்டிலிங்கு மரம்
வான்மேனி – கொட்டான்மரம்
விகசதிக்கொடி – குறட்டைக்கொடி
விகசனாதியறுகு – யானையறுகு
விகசிதமரம் – புன்முருக்குமரம்
விகசிதமிச்கை – கொடியெலிமிச்சை
விகுரிச்செடி – வெள்ளெருக்குச்செடி
விகுளிமரம் – விடத்தலைமரம்




