சித்த வைத்திய அகராதி 12551 – 12600 மூலிகைச் சரக்குகள்
வியல்பூதிமரம் – வில்வமரம்
வியன்மணிவிருட்சம் – சோதிவிருட்சம்
வியாக்கிரிக் கொடி – கண்டங்கத்திரிக் கொடி
வியாசாக்கியப்புல் – பூனைப்புல்
வியாசிதம் – கோஷ்டம்
வியாப்பிரகக்கொடி – வள்ளைக்கொடி
வியாப்பிரயம் – கோஷ்டம்
வியாமகந்திப்புல் – பேய்ப்புல்
வியானவப்பூடு – மயிற்காலடிப்பூடு
விரகதக்கொடி – வெண்சாரணைக் கொடி
விரசகப்பாரைமரம் – குடசப் பாலைமரம்
விரணம்போக்கிப்பாளை – ஆடுதின்னாப்பாளை
விரல்நொச்செடி – நாயுருவிச்செடி
விரவியப்பருத்தி – இலாடன்பருத்திச் செடி
விரவிக்கொடி – வெள்ளரிக்கொடி
விராகனிடை – முப்பத்திரண்டு குன்றிமணியிடை
விராலிச்செடி – விலாரிச்செடி
விராற்கசச்செடி – பூலாஞ்செடி
விரிசிராச்செடி – கையாந்தகரைச்செடி
விரிஞ்சணன்செடி – பிரமதண்டுச்செடி
விரிபூடுகம் – பற்படாகம்
விரியன் பாஷாணம் – பறங்கிப்பாஷாணம்
விரிகியரிசி – நெல்லரிசி
விரிடமரம் – வெட்பாலைமரம்
விருகக்கிழங்கு – வெருகங்கிழங்கு
விருகற்பாதமரம் – ஆலமரம்
விருசகத்திப்புல் – அறுகம்புல்
விருசகாக்கரந்தைச் செடி – விஷ்ணுகரந்தைச்செடி
விருசமரம் – நரிவிளிமரம்
விருசலப்புல் – விஸ்வாமித்திரன் புல்
விருசலாப்ககொடி – பெருநெருஞ்சிக்கொடி
விருசாவிகமரம் – வாதாங்கொட்டை மரம்
விருச்சநாதமரம் – ஆலமரம்
விருச்சிகக்கொடி – சாரணைகொடி
விருச்சிகாவாழைமரம் – நாட்டுவாழைமரம்
விருச்சிகொடுக்குச்செடி – தேள்கொடுக்குச்செடி
விருச்சோபலமரம் – தென்னை
விருதச்செடி – வெள்ளெருக்குச்செடி
விருதுகசக்கொடி – மெழுகுபேய்ப்பீர்க்குக்கொடி
விருத்தபன்னிப்பாளை – பங்கம்பாளைக்கொடி
விருத்தபுட்பமரம் – வாகைமரம்
விருத்தமச்செடி – நிலக்கடம்புச்செடி
விருத்தமல்லிகை – குடமல்லிகைச் செடி
விருத்தமாலிமரம் – விளாமரம்
விருத்திமரம் – மருதுமரம்
விருத்தியச்செடி – பெருவீடகொள்ளுச்செடி
விருந்தமரம் – வேப்பமரம்
விருந்தயம் – கற்கடகசிங்கி
விருமன்னியக்கொட்டை – சேங்கொட்டை
விரும்பாடிகச்செடி – அழுகண்ணிச்செடி




