சித்த வைத்திய அகராதி 12851 – 12900 மூலிகைச் சரக்குகள்
வெள்ளையலரிச்செடி – அவுரிச்செடி
வெள்ளையவரைக்கொடி – குரும்பவரைக்கொடி
வெள்ளைவுரி – அவுரிச்செடி
வெள்ளையாவிகமரம் – ஆவிமரம்
வெள்ளையாமணக்கு – ஆமணக்குச்செடி
வெள்ளையாமிதக்கீரை – வெண்முள்ளிக்கீரைச் செடி
வெள்ளையாவரை – சுசியாவரை
வெள்ளையீருகொல்லி – வெண்சதாகத மரம்
வெள்ளையீருள்ளி – ஈருள்ளிப்பூண்டு
வெள்ளையூதிதம் – வெண்கடுகு
வெள்ளையூமத்தை – ஊமத்தைச்செடி
வெள்ளையௌளு – நரையௌளு
வெள்ளைவாக்கப்பால் – வெள்ளெருக்குப்பால்
வெள்ளைவாடாமல்லிகை – பால்வாடா மல்லிகைச்செடி
வெள்ளை வாதரக்காட்சிமரம் – வாதரக்காட்சிமரம்
வெள்ளைவிஷ்ணுகரந்தை – சுவேதவிஷ்ணுகரந்தை
வெள்ளைவெட்சிப்பூச்செடி – வெட்சிப்பூச்செடி
வெள்ளைவெற்றிலை – சுவேதவெற்றிலை
வெள்ளைவேசிகச்சிமிட்டி – சிமிட்டிச்செடி
வெள்ளை வேலன்மரம் – வெள்வேலா மரம்
வெறிக்கடுக்காய் – பேய்க்கடுக்காய்
வெறுகடி – மூன்றுவிரற்சேர்த்தல்
வெற்பு – மலை – பருவதம் – கிரி
வெற்றித்தண்டுச்செடி – நுரையிண்டுச்செடி
வெற்றிலைக்கொடி – கருப்புவெற்றிலைக்கொடி
வெற்றிலைத்தண்டுலம் – வேம்பின் மேற்புல்லுருவி
வெற்றிலைவள்ளிக்கிழங்குக் கொடி – நாகவள்ளிக்கிழங்குக்கொடி
வெற்றுகச்செடி – வட்டத்துத்திச்செடி
வென்பீலிகச்செடி – இருவேலிச்செடி
வேகிகக் கொடி – அடம்புக்கொடி
வேசிநங்கைச்செடி – மிளகாய்நங்கைச்செடி
வேங்கைமரம் – திமிசுமரம்
வேசயப்பட்டை – லவங்கப்பட்டை
வேசயப்பத்திரி – லவங்கப்பத்திரி
வேசயப்பூ – லவங்கப்பூ
வேதகம் – கற்பூரம்
வேதவரிசி – வாலுளுவையரிசி
வேதவாரிதிச்செடி – கஸ்தூரியலரிச்செடி
வேதன்காய் – கடுக்காய்
வேதிரிமரம் – இலந்தைமரம்
வேதை – ஏமம்
வேதைக்கன்னிச்செடி – நாய்வேளைச்செடி
வேதைவிருட்சம் – உரோமவிருட்சம்
வேத்திரக்கோரை – உப்பங்கோரை
வேத்திரச்செடி – இலந்தைச்செடி
வேந்தன்பட்டை – அரசன்பட்டை
வேந்தன்மரம் – அரசமரம்
வேந்திசமிளகு – வெண்மிளகு
வேப்பமரம் – நிம்பமரம்
வேப்பம்பாசி – நிம்பப்பாசி




