சித்த வைத்திய அகராதி 1451 – 1500 மூலிகைச் சரக்குகள்
இங்குசேபம் – ஓடான்கொடி
இங்குதாதிக்கொடி – பீதரோகணிக்கொடி
இங்குதாநிபமரம் – கருக்குவாய்ச்சி மரம்
இங்குதூரிதம் – கோரோசனை
இங்குபோளம் – கரியபோளம்
இங்குயின்மரம் – பெருமரம்
இங்குரசாலிகமரம் – ஒட்டுப்பலா
இங்குராமம் – பெருங்காயம்
இங்குலிசமரம் – கருங்குங்கிலியம்
இங்குலிசம் – சாதிலிங்கம்
இங்குலொகிதம் – ஒட்டுமாமரம்
இசங்குச்செடி – சங்கஞ்செடி
இசபிமூலச்செடி – உரளிச்செடி
இசருகச்செடி – சிறுதும்பை
இசலிகாமரம் – ஒட்டைமரம்
இசவில்மரம் – கொன்றைமரம்
இசவேல்மரம் – ஒடைமரம்
இசிகடுகு – செங்கடுகு
இசிகாமரம் – கருங்குருந்துமரம்
இசிதாருமரம் – கடம்பமரம்
இசிதாலிகப்பூண்டு – ஒருத்தலை வெள்ளைப்பூண்டு
இசிமலக்கொடி – பேய்ப்புடல்
இசுதாருமரம் – கடம்பமரம்
இசைமுடிச்செடி – சிலந்திநாயகம்
இசைமுட்டிமரம் – செருந்திமரம்
இஸ்கோல்விரை – இஸ்போகல்
இச்சத்திமரம் – இலந்தைமரம்
இச்சிமரம் – இத்திமரம்
இச்சியாமிக்காய் – சீயக்காய்
இச்சிரோகிணிச்செடி – கடுகுரோகிணி
இச்சுச்செடி – ஈஞ்சுச்செடி
இஞ்சங்கிழங்கு – வெந்தோன்றி
இஞ்சாகிகக்காய் – ஏலக்காய்
இஞ்சிகாக்கொடி – கொத்தான்
இஞ்சிகைச்செடி – ஓமச்செடி
இஞ்சிச்செடி – இஞ்சிக்கிழங்கு
இஞ்சோபிதமரம் – ஏழிலைப்பாலை
இடங்கணம் – வெங்காரம்
இடங்கணேயக்கீரை – மயிலி
இடங்கப்பட்டை – இலவங்கம்
இடங்கலிமரம் – வீழிமரம்
இடபவாகனவேம்பு – சிவனார்வேம்புச்செடி
இடம்பகமரம் – நாவல்மரம்
இடம்புரிக்காய் – திருகுக்காய்
இடவயமரம் – மலைப்பாலைமரம்
இடாடிகமாதளை – தாதுமாதளை
இடிகக்கொடி – பெருமருந்து
இடிசிகரமரம் – கோங்கிலவுமரம்
இடுகாட்டவரை – சுடலையாவரை
இடுகாலிக்கொடி – பீர்க்குக்கொடி




