HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 2051 - 2100 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 2051 – 2100 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 2051 – 2100 மூலிகைச் சரக்குகள்

உதகுமரம் – புங்குமரம்
உதக்கீரகம் – பெருஞ்சீரகம்
உதந்திமரம் – உடைமரம்
உதந்திமாகிதமரம் – கம்பளிமரம்
உதந்திமேற்புல்லுருவி – உடைமேற்புல்லுருவி
உதம்பரமரம் – அத்திமரம்
உதரகிரிமரம் – இரத்தவேங்கை
உதரப்பாலாடை – சித்திரப்பாலாடை
உதரப்பூலிகம் – கரணைக்கிழங்கு
உதரவணிதக்கொடி – கண்டங்கத்திரிக்கொடி
உதரவாணிமரம் – நாங்கில்மரம்
உதராவிமஞ்சள் – மரமஞ்சள்
உதரிக்கடலை – கருங்கடலை
உதரிமுறித்தான்செடி – விஷ்ணுகரந்தைச்செடி
உதகவன்பூண்டு – தீமுறிப்பூண்டு
உதாசனச்செடி – கொடுவேலி
உதரம்பரம் – செம்பு
உதிமரம் – ஒதியமரம்
உதியமரம் – ஒதியமரம்
உதிரபந்தமரம் – மாதளைமரம்
உதிரமுறிப்பான்செடி – விஷ்ணுகிராந்திச்செடி
உதிரவன்னிச்செடி – செங்கொடிவேலிச்செடி
உதிரவேங்கைமரம் – இரத்தவேங்கைமரம்
உதிரிதாங்கொடி – கட்டுக்கொடி
உதிரிமாரிமரம் – உதரமாரிமரம்
உதிரிமிண்டிக்காய் – சுரைக்காய்
உதிர்க்கிடாரிக்கிழங்கு – கருடன்கிழங்கு
உதிர்க்கோலகவெற்றிலை – கம்மாறுவெற்றிலை
உதிர்பன்னீர்மரம் – மாலையம்பூமரம்
உதிர்ப்பகமரம் – சவுக்குமரம்
உதிர்வேங்கைமரம் – இரத்தவேங்கைமரம்
உதீசமரம் – வெட்டிவேர்
உதும்ரகச்செடி – எருக்கு
உதும்பரசிதக்கிழங்கு – கொட்டிக்கிழங்கு
உதும்பரமரம் – செவ்வகத்திமரம்
உத்தமசத்துகபாஷானம் – அவுபலபாஷாணம்
உத்தமதாளிக்கொடி – வேலிப்பருத்திக்கொடி
உத்தமாதிப்பழம் – முந்திரிபழம்
உத்தமுந்திரி மரம் – கொட்டைமுந்திரிமரம்
உத்தம்பரவெண்ணெய் – கண்டில்வெண்ணெய்
உத்தம்பரிச்செடி – கொத்தமல்லி
உத்தம்பலமரம் – முந்திரிமரம்
உத்தரகாரிகைச்செடி – விழுதி
உத்தவாலிகக்கொடி – கண்டங்கத்திரிக்கொடி
உத்தாசிகச்செடி – கண்ணுப்பீழைச்செடி
உத்தாபலச்செடி – இசங்கு
உத்தரபீலிகம் – கஸ்தூரி
உத்தரமணிக்கொடி – வேலிப்பருத்திக்கொடி
உத்தாமதிக்காரை – பெருங்காரைமரம்
உத்தாலமரம் – நறுவிலிமரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments