சித்த வைத்திய அகராதி 2851 – 2900 மூலிகைச் சரக்குகள்
கணிகைச்செடி – முல்லைச்செடி
கணிச்சியிலை – வெற்றிலை
கணிவேங்கைமரம் – உதிர வேங்கைமரம்
கணுக்காரிமரம் – உசில்மரம்
கணுப்பாலை – ஏழிலைப்பாலைமரம்
கணுப்பாவகபமரம் – வாதரக்காட்சிமரம்
கணைப்பூண்டு – திருவாலிப்பூண்டு
கணையாகன்னிச்செடி – வாடாமல்லிகைச்செடி
கண்டகச்செடி – நீர்முள்ளிச்செடி
கண்டகம் – அஞ்சனம் , மை
கண்டக்கள்ளி – பச்சான்கள்ளி
கண்டங்கத்தாரிப்பட்டை – செங்கத்தாரிப்பட்டை
கண்டங்கத்திரிச்செடி – ஊதாகண்டங்கத்திரிச்செடி
கண்டங்கத்திரிநீர் – அண்டநீர்
கண்டங்காலிச்செடி – கண்டங்கத்திரிச்செடி
கண்டசருக்கரை – கரும்பின் சருக்கரை
கண்டத்திப்பிலிவேர் – திப்பிலி
கண்டபலமரம் – இலவுமரம்
கண்டம் – கழுத்து
கண்டர் – துருசு
கண்டலிச்செடி – நீர்முள்ளிச்செடி
கண்டல்மரம் – தாழைமரம்
கண்டற்செடி – முள்ளிக்கீரை
கண்டாஞ்சிமரம் – வேலாமரம்
கண்டிக்கீரை – சிறுகீரை
கண்டிதாத்திரிக்கொடி – வரிக்கோவைக்கொடி
கண்டில்வெண்ணெய் – அத்திக்குட்டிமலம்
கண்டினிவிருட்சம் – முண்டகவிருட்சம்
கண்டீரலக்கள்ளி – சதுரக்கள்ளி
கண்டுகத்தரிச்செடி – ஈனாகத்திரி
கண்டுகம் – மஞ்சிட்டி
கண்டுகாசியாமணக்கு – எலியாமணக்கு
கண்டுச்செடி – கண்டங் கத்திரிச்செடி
கண்டுச்சோளம் – வெள்ளைச்சோளம்
கண்டுபரங்கி – சிறுதேக்கு
கண்டுபாசிதம் – உசிலம்பாசி
கண்டுமாலம் – நெல்லிக்காய்
கண்டுமூலம் – திப்பிலிமூலம்
கண்டூதிச்செடி – காஞ்சொறிச்செடி
கண்டூயகமரம் – உதிரிமாரிமரம்
கண்டூரங்கொடி – பூனைக்காலிக்கொடி
கண்ணடைத்தேகிச்செடி – தேயிலைச்செடி
கண்ணாடம் – திப்பிலி
கண்ணாடிப்புல் – சோதிப்புல்
கண்ணிகாகாளிச்செடி – மணத்தக்காளிச்செடி
கண்ணிகாச்செடி – மூக்குறட்டைச்செடி
கண்ணுக்கரசன் – துருசு
கண்ஞக்காசனிகம் – அம்பர்
கண்ணுக்கினியான்செடி – பொன்னாங்கண்ணிச்செடி
கண்ணுக்கேற்றமரம் – கொடிநெல்லிமரம்




