சித்த வைத்திய அகராதி 3501 – 3550 மூலிகைச் சரக்குகள்
களாற்பூகத்தென்னை – கௌளிபாத்திரத்தென்னை
களிகமரிசி – வாலுளுவையரிசி
களிச்சக்காய் – கெச்சக்காய்
களிப்பாக்கு – தெக்கம்பாக்க
களிப்பாசிறமரம் – கொய்யா
களிப்பிரண்டை – கோப்பிரண்டைக்கொடி
களிப்புக்கள்ளி – கொடிக்கள்ளி
களிம்பு – பிளாஸ்திரி
களைக்கொட்டி – களற்கொட்டி
களைதவத்துத்தி – கொடித்துத்தி
கள்மரம் – பனைமரம், தென்னை
கள்ளக்கடவிமரம் – கொடியெழுமரம்
கள்ளாம்பற்கொடி – வெள்ளாம்பற்கொடி
கள்ளாம்பிதச்செடி – சதாப்பிதச்செடி
கள்ளிக்கொடி – கொடிக்கள்ளி
கள்ளிச்சம்பு – நீர்ச்சேம்பு
கள்ளிமந்தாரை – ஆட்டாங்காரை
கள்ளிமந்திக்ககொடி – பிரண்டைக்கொடி
கள்ளிமரம் – பயற்றங்கள்ளிமரம்
கள்ளிமாதிகம் – சதுரக்கள்ளி
கள்ளிமுளையான் – நானாங்கள்ளி
கள்ளிமூலிகைமரம் – கள்ளிமரம்
கள்ளிமேற்புல்லருவி – அடவிமேற்புல்லருவி
கள்ளுகிக்கத்திரிச்செடி – கொடிவலங்கத்திரிச்செடி
கறிச்சேம்பு – சேப்பங்கிழங்கு
கறித்தும்பைச்செடி – பெருந்தும்பைச்செடி
கறிப்பாகல் – மிதிபாகல் – பாகல்
கறிப்பாரைக்கீரை – பாலைக்கீரை
கறிமுருங்கைமரம் – முருங்கை
கறிமுள்ளிக்கத்திரி – முள்ளிக்கத்திரி
கறிமுள்ளிக்காளி – மிளகுதக்காளிச்செடி
கறிமுள்ளிக்கீரை – முள்ளிக்கீரை
கறிமேதைவிரை – சப்சாவிரை
கறியசீரம் – கருஞ்சீரகம்
கறியசூரச்செடி – நத்தைக்சூரிச்செடி
கறியாமணக்குக்கொடி – பறங்கியாமணக்கு
கறியுப்பு – பிரமவுப்பு
கறிவேப்பிலைமரம் – கருவேப்பிலைமரம்
கறுக்காய்மரம் – கடுக்காய்மரம்
கற்கடகசிங்கி – கடுக்காய்ப்பூ
கற்கடக பாஷாணம் – கவுந்தகபாஷாணம்
கற்கடகநூல் – தாமரைநூல்
கற்கண்டமரம் – அகில்மரம்
கற்கண்டு – சீனிக்கற்கண்டு
கற்கபலச்செடி – மாதுளைச்செடி
கற்காமி – கல்மதம்
கற்கானசீரகம் – கருஞ்சீரகம்
கற்கோரை – ஊசிக்கோரை
கற்கோரோசிகம் – சதகுப்பை
கற்கோவை – மலைக்கோவை




