HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 4701 - 4750 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 4701 – 4750 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 4701 – 4750 மூலிகைச் சரக்குகள்

கூவமாவுச்செடி – சீமைச்செடி
கூவமூரிகமரம் – நாங்கில்மரம்
கூவரகு – பேய்வரகு
கூவலமரம் – துவரைமரம்
கூவழிஞ்சி – கொடியழுஞ்சி
கூவிளங்கனி – வில்வப்பழம்
கூவிளமரம் – வில்வமரம்
கூவிளமாதிகமரம் – விளாமரம்
கூவிளைமரம் – வில்வமரம்
கூவுசுணங்கமரம் – நாய்விருட்சம்
கூழகச்செடி – எள்ளுச்செடி
கூழாமணிமரம் – முன்னைமரம்
கூழான்மீசைப்புல் – இராவணன் மீசைப்புல்
கூழ்க்கஞ்சி – மாக்கஞ்சி
கூழ்ப்பாண்டம் – சாம்பற்பூசணி
கூழ்வரகு – கேழ்வரகு
கூறாகிவேம்பு – நிலவேம்புச்செடி
கூறுகச்செடி – எள்ளுச்செடி
கூனிமித்தரி – மாரணம்
கூன்முதுகு – ஆமையோடு
கெகராசினிச்செடி – பூலாஞ்செடி
கெக்கரிசச்செடி – செங்கழுநீர்ச்செடி
கெசகன்னிக்கிழங்கு – வெருகன்கிழங்கு
கெசகன்னிவாழை – மொந்தைவாழைமரம்
கெசபுடம் – நூறெருப்புடம்
கெசபூகச்செடி – துவரைச்செடி
கெசமாமுட்டிமரம் – எட்டிமரம்
கெசமூகப்பாசி – இலைப்பாசி
கெசனிக்கீரை – துயிலிக்கீரை
கெசாசைக்கெடி – கையாந்தகரைச்செடி
கெச்சக்காய் – சுழற்சிக்காய்
கெச்சக்கீயக்கொடி – தூதுவளைக்கொடி
கெச்சசீரச்செடி – முல்லைச்செடி
கெச்சம் – தனம், குயம்
கெச்சனித்தல் – சேருதல், கூடுதல்
கெட்டிமூங்கில் – கல்மூங்கில்மரம்
கெட்டிமேகிதமரம் – புரசமரம்
கெட்டிவஞ்சிமரம் – வீரவஞ்சிமரம்
கெண்டகாரணிவேர் – சிவதைவேர்
கெண்டூரம் – பாம்புகொல்லிசெடி
கெண்டைக்காரிவிருட்சம் – உரோமவேங்கைவிருட்சம்
கெதை – உப்பினாற்செய்தகுகை
கெந்தகக்கோலிச்செடி – தூம்புரவாலிச்செடி
கெந்தகச்செடி – நாய்வேளைச்செடி
கெந்தகநீர் – சுத்தகங்கைநீர்
கெந்தகபாஷாணம் – கெந்திப்பாஷாணம்
கெந்தகப்பிரண்டைக்கொடி – நாகப்பிரண்டைக்கொடி
கெந்தகமாஞ்சிற்கொடி – புறங்கைநாறிச்செடி
கெந்தகமீஞ்சிதக்காளி – நாகதாளிக்கள்ளி
கெந்தகம் – பாம்புகொல்லி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments