சித்த வைத்திய அகராதி 4951 – 5000 மூலிகைச் சரக்குகள்
கொடிவேர் – தலைப்பிள்ளை
கொடிவேலிச்செடி – சித்தர்மூலச்செடி
கொடுகணிச்செடி – குறுந்தொட்டிச்செடி
கொடுநாவிச்செடி – கொடிவேலிச்செடி
கொடுநீபமரம் – மஞ்சட் கடம்புமரம்
கொடுப்பைச்செடி – பொன்னாங்காணிச்செடி
கொடுமுடிப்பூண்டு – கோபுரப்பூண்டு
கொடுவாஞ்சிப்பழம் – கொட்டாஞ்சிப்பழம்
கொடுவிஷம் – வெள்ளைப்பாஷாணம்
கொட்டகச்செடி – நாயுருவிச்செடி
கொட்டங்காய் – கொப்பரைத்தேங்காய்
கொட்டாஞ்சிப்பழம் – கொடுபாஞ்சிப்பழம்
கொட்டாமத்தகிச்செடி – மருளுமத்தைச்செடி
கொட்டான்கரந்தை – நாறுகரந்தை
கொட்டான்சிலை – வாகைமரம்
கொட்டான்மரம் – நெய்க்கொட்டான்மரம்
கொட்டிச்காசரைக்கீரை – கொடிக்காசரைக்கீரை
கொட்டிக்கிழங்கு – கண்மாய்க்கொட்டிக் கிழங்கு
கொட்டிமப்பட்டை – செந்நகரப்பட்டை
கொட்டைக்கரந்தை – கொட்டான்கரந்தை
கொட்டைநாளச்செடி – கொட்டைக்கரந்தைச்செடி
கொட்டைப்பாக்கு – பச்சைப்பாக்கு
கொட்டைப்பாசம் – குளர்தாமரை
கொட்டைப்பாசி – குளத்துப்பாசி, குளிர்தாமரை
கொட்டைப்பாமிரச்செடி – கொட்டைக்கரந்தைச்செடி
கொட்டை முத்து – ஆமணக்கு முத்து
கொட்டைமுத்தெண்ணெய் – விளக்கெண்ணெய்
கொட்டைமுந்திரி – முந்திரிப்பழம்
கொட்டைமூலம் – கொட்டிக் கிழங்கு
கொட்டையவரை – பயறுமுற்றிய அவரை
கொட்டையிலந்தைமரம் – நரியிலந்தைமரம்
கொட்டையிலாமுந்திரிப்பழம் – கிஸ்மிஸ்பழம்
கொண்காகிதப்புல் – மூகைப்புல்
கொண்டகச்செடி – குறிஞ்சாச்செடி
கொண்டகிமரம் – எட்டிமரம்
கொண்டசிரமரம் – கொந்தாழைமரம்
கொண்டச்சாணிக்கொடி – நஞ்சறுப்பான்கொடி
கொண்டல்மேனிக்கொடி – நீலத்தாமரைக் கொடி
கொத்தமல்லி – உருளரிசி
கொத்தலரிச்செடி – அடுக்கரளிச்செடி
கொத்தவரைச்செடி – சீனியவரைச்செடி
கொத்தாக்குச்சிமிட்டி – குத்தாக்குச்சிமிட்டிச்செடி
கொத்தான்கொடி – கொடிக்கொத்தான்
கொத்தான்சூரிகம் – பச்சைமிளக
கொத்தான்செடி – இரும்பாச்செடி
கொத்திலைமரம் – நிலவேம்புமரம்
கொந்தளம் பழம் – சமுத்திராப்பழம்
கொந்தளைக்கொடி – பேய்க்குமிட்டிக்கொடி
கொந்தாழைமரம் – செந்தாழை மரம்
கொந்துகப்பூண்டு – குதிரைவாலிப்பூண்டு




