சித்த வைத்திய அகராதி 51 – 100 மூலிகைச் சரக்குகள்
அக்கப்பாடு – மோசம்
அக்கமுன்றி – கண்
அக்கரச்செடி – வெள்ளருக்கு
அக்கரரகம் – அக்கிராகாரம்
அக்காரப்பட்டை – புளிமாபட்டை
அக்காரமரம் – மாமரம்
அக்கார மோனிக்கொடி – கருங்கோவைக்கொடி
அக்காளப்புல் – தரகப்புல்
அக்கிச்சாறு – கற்றாழைச்சாறு
அக்கிடம் – வசம்பு
அக்கிப்பூடு – கொடிமாப்பூடு
அக்கிராகரம் – அக்கிராகாரம்
அக்கிராகாரச்செடி – வன்னிக்காரச்செடி
அக்கிலாங்கொடி – கருநாகதாளி
அக்கிலு – நெருஞ்சில்கொடி
அக்கினிக்கபம் – கடல்நுரை
அக்கினிச்சிலக்கிழங்கு – கார்த்திகைக்கிழங்கு
அக்கினிச்சிலாசக்செடி – கருங்கொடுவேலிச்செடி
அக்கினிச்சிவச்செடி – குப்பைமேனிச்செடி
அக்கினிச் சிவாகச்செடி – கொடுவேலிச்செடி
அக்கினிச்செடி – செங்கொடிவேலிச்செடி
அக்கினிச்சேவகக்கிழங்கு – கருநாவிக்கிழங்கு
அக்கினித்திராவகம் – அனற்றிராவகம்
அக்கினிமாந்தி – வாதமடக்கி
அக்கினிமுகக்கொட்டை – சேங்கொட்டை
அக்கினிமூலம் – சேங்கொட்டை
அக்குமணி – எட்டிக்கொட்டை
அக்குமரம் – எட்டிமரம்
அக்குரமரம் – அகில்மரம்
அக்குரோசக்கொடி – கருஞ்சீந்திற்கொடி
அக்கோடகக்காய் – கடுக்காய்
அக்கோடிகச்செடி – கருஞ்சூரை
அக்கோலமரம் – தேற்றாமரம்
அங்கசங்கம் – சேர்க்கை
அங்கசபிசாகச்செடி – கருநாயுருவிச்செடி
அங்கசூதமரம் – கொன்றைமரம்
அங்கணக்காய் – கடுக்காய்
அங்கயற்கண்ணிச்செடி – கற்பூரவல்லிச்செடி
அங்கமாதிப்பாஷாணம் – கெளரிபாஷாணம்
அங்கரமோதகிமரம் – கருநாரத்தைமரம்
அங்கரவல்லிச்செடி – குறிஞ்சாச்செடி
அங்கரூபகம் – மயிர், ரோமம்
அங்கலி – கொங்கை
அங்கன பாஷாணம் – அமிர்த பாஷாணம்
அங்கனி – கற்றாழை
அங்கனை – பெண்
அங்கனைக்கள்ளிச்செடி – ஐங்கணுக்கள்ளிச்செடி
அங்காரம் – தீ, நெருப்பு
அங்காரவல்லி – சிறுதேக்கு
அங்காரவாரிதிச்செடி – கருந்தகரைச்செடி




