சித்த வைத்திய அகராதி 6651 – 6700 மூலிகைச் சரக்குகள்
சீரகபாடிகம் – கோட்டம்
சீரகபாதிதப்பூ – கொடிச் சம்பங்கிப்பூ
சீரகம் – நச்சீரகம்
சீரகரோகிணி – பீதரோகணி
சீரகாகோளி – சிறுகாகோளி
சீரதீச்செடி – ஓமச்செடி
சீரமப்புல் – விலாமிச்சைப்புல்
சீரமித்தென்னை – கெவுளிபாத்திரத்தென்னை
சீரமோடகச்செடி – வீழிச்செடி
சீரமோணகத்தேன் – கொம்புத்தேன்
சீரம் – சீரகம் – நச்சீரகம்
சீரவட்டைச்செடி – ஈயத்தண்டுச்செடி
சீராசெங்கழுநீர்க்கொடி – செங்கழுநீர்க்கொடி
சீராமரம் – பலாசுமரம்
சீரிகைமரம் – வண்டுகொல்லிமரம்
சீரிடமரம் – வாகைமரம்
சீரிணக்கண்ணிச்செடி – பொன்னாங்கண்ணிச்செடி
சீரிணபன்னிமரம் – வேப்பமரம்
சீரிதமரம் – மரவுரிமரம்
சீரிவிருட்சம் – புளியமரம்
சீரிவில்வமரம் – ஆயிலியமரம்
சீருணி – தாம்பிரம்
சீரோணிகச்செடி – காட்டாமணக்குச்செடி
சீர்காகோழி – சிறுதேட்கொடுக்கு
சீர்க்கோளகமரம் – வெண்தேக்கு
சீர்த்தாகிகக்ட்டை – தேவதாரக்கட்டை
சீர்த்துழாயச்செடி – துளசி
சீர்பத்திரவாசு – புண்ணியவரசு
சீர்பந்தபாஷாணம் – கபாலபாஷாணம்
சீர்ப்பணப்பூடு – அமலைப்பூடு
சீலகாவுருவி – வேம்பின்மேற்புல்லுருவி
சீலகிக்கொடி – சோனைப்புல்
சீவகப்பாலை – திருநாமப்பாலை
சீவகப்பேரிதம் – புளிப்புநீராகாரம்
சீவகமரம் – வேங்கைமரம்
சீவகமிருதி – கொல்லன்கோவைக்கொடி
சீவகம் – ஏலம்
சீவகாதீதக்கட்டை – சந்தனக்கட்டை
சீவந்திக்காய் – கடுக்காய்
சீவந்திக்கிரியமரம் – பெண்பனைமரம்
சீவந்திரிக்கொடி – சீந்திற்கொடி
சீவந்திரேவதச்செடி – பூனைவணங்கிச்செடி
சீவந்திரோகிமரம் – பாலைமரம்
சீவப்பிரியமரம் – கடுக்காய்மரம்
சீவனாகினியிலை – வெற்றிலை
சீவனாயுதம் – உயிர்தருமருந்து
சீவனிக்கிழங்கு – செவ்வள்ளிக்கிழங்கு
சீவனிநங்கைக்கொடி – தற்பூசணிக்கொடி
சீவாகிக்கட்டை – பாலைமரம்
சீவியங்கம் – கல்லுப்பு




