சித்த வைத்திய அகராதி 6951 – 7000 மூலிகைச் சரக்குகள்
சூடன் – கற்பூரம், சுடற்கொடியோன்
சூடாமணிக்கொடி – குன்றிமணிக்கொடி
சூடிச்சாரம் – நவச்சாரம்
சூதகநீர் – இந்திரகோபப்பூச்சிநீர்
சூதகப்புல் – தருப்பைப்புல்
சூதகமரம் – புளிமாமரம்
சூதகமலப்பூ – புளிமாம்பூ
சூதகமல்லிச்செடி – மல்லிகைச்செடி
சூதகம் – பெண்ணழுக்கு
சூதச்செப்பு – வீட்டுவிளக்கம்
சூதபாஷாணம் – ரசபாஷாணம்
சூதபாந்தவிச்செடி – தொழுகண்ணிச்செடி
சூதப்புள்ளடி – பெரும்புள்ளடி
சூதம் – ரசம் – சிவன்விந்து
சூதனமரம் – கோங்குமரம்
சூதாஞ்சனம் – நீலாஞ்சனம்
சூதுமாதவச்செடி – ஒரிதழ்த்தாமரைச்செடி
சூநடதுயிலிச்செடி – சிலந்திநாயகச்செடி
சூபகாவவரை – பேய்த்தம்பட்டையவரைக்கொடி
சூபிகாப்பூண்டு – பாம்புகொம்புப்பூண்டு
சுவேதகாண்டக்கொடி – சீந்திற்கொடி
சுவேதகாந்தவறுகு – வெள்ளறுகு
சுவேதகாரத்தட்டை – நாணற்றட்டை
சுவேதகாரிமரம் – விடமருதமரம்
சவேதகிச்செடி – வெட்சிப்பூச்செடி
சுவேதகிச்சோளம் – வெண்சோளம்
சுவேதகிமரம் – மாவுலிங்கமரம்
சுவேதகிமல்லிகை – வெள்ளைவாடா மல்லிகை
சுவேதகியறுகுச்செடி – வெள்ளெருக்குச்செடி
சுவேதகூச்சரக்கொடி – வெண்வட்டச்சாரணைக்கொடி
சுவேதக்கொடி – வஞ்சிக்கொடி
சுவேதநாதம் – இந்திரியம்
சுவேதபசலிக்கொடி – வெண்பசலிக்கொடி
சுவேதமச்செடி – ஆற்றுமுள்ளங்கிச்செடி
சுவேதமாலிகாக்கொடி – வெண்சாரணைக்கொடி
சுவேதமூலினிச்செடி – தொட்டால்வாடிச்செடி
சுவேதவஞ்சிமரம் – வஞ்சிமரம்
சுவேதவமரம் – வெண்பாதிரிமரம்
சுவேதவாடிகச்செடி – தொட்டால்வாடிச்செடி
சுவைகமச்செடி – மலையாமணக்குச் செடி
சுவையாதீதம் – உப்பு – கஞ்சியுப்பு
சுவ்வகில்மரம் – மலையிலவமரம்
சுழலாவிரை – பொன்னாவிரை
சுழற்காய்ச்செடி – சுண்டைக்காய்ச்செடி
சுழற்றிந்துகச்செடி – பின்தொடரிச்செடி
சுழிகோதைப்புல் – பீனசப்புல்
சுளட்டிச்செடி – வட்டச்சுளட்டிச்செடி
சுளிகாமரம் – வாகைமரம்
சுளிகாமேற்புல்லுருவி – வாகைமேற்புல்லுருவி
சுளிகைமரம் – முருங்கைமரம்




