HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 7301 - 7350 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7301 – 7350 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7301 – 7350 மூலிகைச் சரக்குகள்

செவிரியக்கொடி – தட்டைப்பயற்றுக்கொடி
செவ்வகத்திமரம் – சிவப்பகத்திமரம்
செவ்வகில்மரம் – சிவப்பகில்மரம்
செவ்வகுப்பாலை – குடசப்பாலைமரம்
செவ்வடுக்கலரி – குங்குமவடுக்கலரிமரம்
செவ்வத்திமரம் – சிவப்பத்திமரம்
செவ்வந்திச்செடி – சாமந்திப்பூச்செடி
செவ்வம்மான்பச்சரிசி – சிவப்புச்சித்திரப்பாலாடைச்செடி
செவ்வரளி – சிவப்பரளிச்செடி
செவ்வலரி – குங்குமவலரிச்செடி
செவ்வல்லிக்கிழங்கு – சிவப்புஅல்லிக்கிழங்கு
செவ்வல்லிக்கொடி – செவ்வாம்பற்கொடி
செவ்வல்லிக்கொடி – செவ்வாம்பற்கொடி
செவ்வல்லியசாரக்கொடி – குதிரைக்குளம்படிக்கொடி
செவ்வள்ளிக்கொடி – சிவப்புக்காசரளிச்செடி
செவ்வாத்திமரம் – சிவப்பாத்திமரம்
செவ்வாமகச்செடி – சிவப்புக்காசித்தும்பைச்செடி
செவ்வாமணக்குச்செடி – சிவப்பாமணக்குச்செடி
செவ்வாமிகக்கொன்னை – சிவப்புக்கொன்னைமரம்
செவ்வாம்பற்கொடி – சுரக்காம்பற்கொடி
செவ்வாவிகமரம் – செம்மரம்
செவ்வாழைமரம் – சிவப்புவாழை
செவ்விகச்செடி – மிளகுச்செடி
செவ்விசாகியக்காய் – சிவப்புக்கடுக்காய்
செவ்விண்டங்கொடி – சிவப்பிண்டங்கொடி
செவ்வியம் – செவியம்
செவ்விருள்மரம் – உன்மாலவிமரம்
செவ்விளநீர்த்தென்னை – சிவப்பிளநீர்த்தென்னை
செவ்வுகாமரம் – கொப்புளவஞ்சி
செவ்வெருக்கன் – எருக்கஞ்செடி
செவ்வெருக்கு மரம் – மலைஎருக்கு
செவ்வேங்கைமரம் – உதிரவேங்கைமரம
செழுமலர்க்கொன்னை – சிவப்புக்கொன்னைமரம்
செழுமறைப்புல் – சோதிப்புல்
சென்ஜன்செடி – சீமைச்செடி
சென்னிப்பூண்டு – ஒருத்தலைப்பூண்டு
சென்னிவருத்தி – தலையோடு, பேரண்டம்
சென்னிவலை – மண்டை, தலை
சேகராஜமரம் – மாமரம்
சேகராவலக்கீரை – வெள்ளையெலிச்செவிக்கீரை
சேகரிச்செடி – நாயுருவிச்செடி
சேகிலாசிதச்செடி – சிவகரந்தைச்செடி
சேகிலிமரம் – வாழைமரம்
சேகேலவமரம் – வெள்ளையீருகொல்லிமரம்
சேக்கைப்பசலிக்கொடி – சிவப்புப்பசளைக்கொடி
சேக்கைப்பலைச்செடி – முல்லைச்செடி
சேங்காரிகக்கொடி – பேய்ப்பாடாவவரைக்கொடி
சேங்கொட்டைமரம் – சேராங்கொட்டைமரம்
சேசனியக்கொடி – தெள்ளுக்கொடி
சேதாம்பற்கொடி – செவ்வாம்பற்கொடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments