சித்த வைத்திய அகராதி 8201 – 8250 மூலிகைச் சரக்குகள்
துருசுக்குத்தேவி – மருக்களஞ்செடி
துருசுக்குப்புருடன் – அயம்
துருஞ்சில்மரம் – உசில்மரம்
துருத்தூரச்செடி – ஊமத்தைச்செடி
துருபவருணிச்செடி – காட்டாமணக்குச்செடி
துருபாரிதமரம் – சித்தகத்திமரம்
துருமசிரேட்டமரம் – பளைமரம்
துருமநகக்கொடி – புலிதுடக்கிக்கொடி
துருமம் – குங்குமம்
துருமவருணிச்செடி – காட்டாமணக்குச்செடி
துருமேகமரம் – பனைமரம்
துருமேகம்போக்கி – சிகரெட்டு
துருமோற்பலமரம் – கோங்குமரம்
துரும்புநீர் – கற்றாழைநீர்
துருவாதிச்செடி – காட்டாமணக்குச்செடி
துருவாதினிப்பூச் செடி – சிமிக்கிமல்லிகைச்செடி
துருவாவேலம் – சிற்றேலம்
துரோணகைச்செடி – வெண்ணொச்சிச்செடி
துரோணச்செடி – தும்பைச்செடி
துரோணிகாமுத்து – கொட்டைமுத்து
துரோணிகைவிரை – ஆவிரை
துரோணிதமரம் – தாழைமரம்
துர்த்தூகிகச்செடி – ஊமத்தைச்செடி
துலாந்திரம்- அந்தரமாய்க்கட்டுவது
துலாப்படிகப்பூடு – பனிதாங்கிப்பூடு
தூலியாசுனமரம் – செம்முருங்கைமரம்
துலேயக்கொடி – நீர்ச்சுண்டிக்கொடி
துவரைச்செடி – முதிரைச்செடி
துவரைச்சேபிதமரம் – கருந்துவரை மரம்
துவரைமரம் – வெண்துவரை மரம்
துவரைமல்லிச்செடி – செம்மல்லிகைச்செடி
துவர்க்காம்பு – கத்தைக்காம்பு
துவர்க்காய்மரம் – கமுகுமரம்
துவகைச்செடி – வட்டத்திருப்பிச் செடி
துவாரபிண்டி – வாசற்படி
துவாரம் – வாசல், தொண்டி
துவிகாசிகவரத்தை – சித்தரத்தை
துவிகாயாசிமரம் – செம்முருங்கைமரம்
துவிசபதிச்செடி – சந்திரகாந்திச்செடி
துவிபுத்துக்கிழங்கு – தண்ணீர்விட்டான்கிழங்கு
துவிமுகக்காளான் – புற்றுக்காளான்
துவைசிச்செடி – துளசிச்செடி
துழாய்ச்செடி – திருத்துழாய்ச்செடி
துளக்காவணமரம் – பூவந்திமரம்
துளசிச்செடி – வெண்துளசிக்செடி
துளசிச்சேபிதம் – துளசிமூலம்
துளபம் – துளசி
துளம்பிக்கொடி – காத்தொட்டிக்கொடி
துளவிகம் – திப்பிலி
துளவிகாதிதம் – சாம்பிராணி




