சித்த வைத்திய அகராதி 8451 – 8500 மூலிகைச் சரக்குகள்
தொய்யாக்கீரை – தொயிலிக்கீரைச்செடி
தொலியாக்கரம்பைச்செடி – நத்தைச்சூரிச்செடி
தொலைதாரிப்பூண்டு – பல்லிப்பூண்டு
தொவலிகாச்செடி – பாவட்டைச்செடி
தொழவகாச்செடி – பவளமல்லிகைச்செடி
தொழுகண்ணிச்செடி – தொடர்கண்ணிச்செடி
தொன்மரம் – ஆலமரம்
தொன்றூயக்கொடி – பாலாட்டங்கொடி
தொன்னோகமரம் – பாலிருள்மரம்
தோகசம் – பால்
தோகப்புல் – சோனைப்புல்
தோகலயமரம் – பாற்கடுக்காய்மரம்
தோகலிமரம் – அசோகுமரம்
தோகற்புல் – சோனைப்புல்
தோகைகுழற்கொடி – முதியார்கூந்தற்கொடி
தோக்குளச்செடி – பருத்திச்செடி
தோசநாசனிச்செடி – மருளுமத்தைச்செடி
தோடகக்கொடி – தாமரைக்கொடி
தோடவயச்செடி – பாற்குறட்டைச்செடி
தோடுமொக்கு – மராட்டிமொக்கு
தோட்சூகச்செடி – பாற்குறண்டிச்செடி
தோட்டிகத்திப்பிலி – யானைத்திப்பிலி
தோட்டிகிமரம் – நெல்லிமரம்
தோட்டுசச்செடி – காசித்தும்பைச்செடி
தோணிமரம் – மருதோன்றிமரம்
தோண்டவச்செடி – பிச்சிப்பூச்செடி
தோண்டிக்கொடி – வாற்சுண்டிக்கொடி
தோதகக்கன்னிமரம் – சப்பட்டிமரம்
தோதகத்திமரம் – சுவாதகத்திமரம்
தோதிகமுட்டிச்செடி – பேராமுடிச்செடி
தோதிகாவந்திப்பூ – செவ்வந்திப்பூ
தோதியமரம் – பொந்தம்புளிமரம்
தோத்திரையக்கொடி – காட்டவரைக்கொடி
தோய்தலைக்கொடி – பொடுதலை
தோய்தறிசவிரை – புத்திரசீலிவிரை
தோரைநெல் – குழநெல்
தோரையச்செடி – புல்லாமணக்குச்செடி
தோளமேதிமரம் – எருமைவிருட்சம்
தோளிச்செடி – அவுரிச்செடி
தோன்றிமரம் – மருதோன்றிமரம்
தேளதிகசிப்பி – முத்துச்சிப்பி
தேளதிகபிச்சிச்செடி – சீமைப்பிச்சிச் செடி
தேளதிகப்பீளைச் செடி- பெரும்பீளைச்செடி
தௌதிகமுல்லைச்செடி – காட்டுமுல்லைச்செடி
தௌதியவரளிச்செடி – செவ்வரளிச்செடி
தௌத்தியசாலை – கோடகசாலை
தௌத்திரவமரம் – பூபம்வாழைமரம்
தௌமாதியக்கொடி – பூனைக்காலிக்கொடி
தெளரிகவள்ளி – செவ்வள்ளிக்கிழங்கு
தெளரிதக்கிழங்கு – பூமிச்சருக்கரைக் கிழங்கு




