சித்த வைத்திய அகராதி 8901 – 8950 மூலிகைச் சரக்குகள்
நிம்பயிலை – வேப்பிலை
நிம்பயீர்க்கு – வேப்பிலையீர்க்க
நிம்பபெண்ணெய் – வேப்பெண்ணெய்
நிபக்கியமரம் – நறுமுருங்கைமரம்
நிபக்குரோதமரம் – ஆலமரம்
நிபதீசமரம் – சுனைப்புங்குமரம்
நிபாச்செடி – சிவதுளசிச்செடி
நிரம்பியமரம் – வாழைமரம்
நிரைகிளம்பி – சூலாடு
நிர்விஷக்கிழங்கு – சாடுவார், நிற்பிசி, சடாவார்கிழங்கு
நிலஅவுரி – பேரவுரி
நிலகந்தகச்செடி – நொச்சிச்செடி
நிலகிக்கொடி – கள்ளிக்கொடி
நிலகிக்கொத்தவரை – சீனிக்கொத்தவரைச்செடி
நிலக்கடம்புமரம் – சிறுகடம்புமரம்
நிலக்கடலை – வேர்க்கடலை
நிலக்கடற்செடி – கடலாரைசெடி
நிலக்கலிக்கொடி – பெருங்கட்டுக்கொடி
நிலக்கிழங்கு – பிண்டம்
நிலக்குண்டிக்கொடி – குன்றிமணிக்கொடி
நிலக்குதாக்கிழங்கு – சேனைக்கிழங்கு
நிலக்குமிழ்ச்செடி – சிறுகுமிழ்ச்செடி
நிலக்கூந்தற்கீரை – எலிச்செவிக்கீரை
நிலஞ்சோதிவிருட்சம் – சோதிவிருட்சம்
நிலகத்தூரிச்செடி – கருவூமத்தைச்செடி
நிலத்துத்திச்செடி – துத்திச்செடி
நிலத்தும்பைச்செடி – தும்பைச்செடி
நிலத்துளசிச்செடி – துளசிச்செடி
நிலப்பயிர் – பெண்
நிலப்பனைச்செடி – தரைப்பனைச்செடி
நிலப்பாளை – பங்கம்பாளைச்செடி
நிலப்பூசணி – காட்டுப் பூசணிச்செடி
நிலமகட்கொடி – சீதாசெங்கழுநீர்க்கொடி
நிலம்புக்கொடி – தாளிக்கொடி
நிலம்புச்சீத்தா – சீத்தாமரம்
நிலம்புரண்டி – பூமிபுரண்டிச்செடி
நிலவவிருட்சம் – சோதிவிருட்சம்
நிலவாகைச்செடி – நிலஆவரைச்செடி
நிலவாமியக்கொடி – சீதாசெங்கழுநீர்க்கொடி
நிலவாவரைச்செடி – நிலவாகைச்செடி
நிலவாழை – கல்வாழைசெடி
நிலவிப்பனை – நிலப்பனை
நிலவிளா – குட்டிவிளாச்செடி
நிலவீரியம் – பூநீர்
நிலவுகாய் – எருக்கங்காய்
நிலவுகாய்ச்செடி – எருக்கஞ்செடி
நிலவேம்பு – காட்டுவேம்பு
நிலவேர் – ஆண், பூநாகம், நாக்கிலாம்பூச்சி
நிலாவரை – நிலவாகை
நிவசனம் – புடவை, சேலை, துகில்




