சித்த வைத்திய அகராதி 9251 – 9300 மூலிகைச் சரக்குகள்
பசுமூலி – பச்சைப்புல்
பசுமை – பச்சை
பசும்பிடிப்புல் – அறுகம்புல்
பசுவின்பால் – ஆவின்பால்
பசூசகமரம் – வெள்ளுகாமரம்
பச்சமஞ்சள் – மரமஞ்சள்
பச்சாகிலிகமரம் – செண்பகமரம்
பச்சாளைமரம் – நொச்சிமரம்
பச்சினி – பத்தாமாதம்
பச்சைக்கடலை – கடலை – சிறுகடலை
பச்சைக்கடுகு – செங்கடுகு
பச்சைக் கடுக்காய் – அரிதகிக்காய்
பச்சைக்கற்பூரம் – சேர்க்கைப்பூரம்
பச்சைக்குங்குமப்பூ – ஈரக்குங்குமப்பூ
பச்சைக்கொட்டைத் தாமரை – ஆகாசத் தாமரை
பச்சைக்கொம்பு – இஞ்சி
பச்சைத்திப்பிலிவேர் – திப்பிலி வேர்
பச்சைநஞ்சு – பாஷாணம்
பச்சைநாவிக் கிழங்கு – கலப்பைக்கிழங்க
பச்சைநிறக்கொடி – முசுமுசுக்கைக் கொடி
பச்சைப்பயறு – பாசிப்பயற
பச்சைப்பாக்கு – காயாப்பாக்கு
பச்சைப்பாதிகச்செடி – வெள்ளை வாடாமல்லிகைச் செடி
பச்சைப்பூரம் – பச்சைக்கற்பூரம்
பச்சைப்பைக்கொடி – பைதிருதிக்கொடி
பச்சைமிளகாய் – ஈரமிளகாய்
பச்சைமுளகாய் – ஈரமிளகாய்
பச்சையரிசி – பாலரிசி
பச்சைவாரிகமரம் – பரம்பைமரம்
பச்சைவாழைமரம் – பச்சைநிறவாழை மரம்
பச்சைவானகமரம் – சொத்தைஈருவல்லி மரம்
பச்சைவிளாமிச்சைவேர் – விளாமிச்சை வேர்
பஞ்சபூதச்சரக்கு – தாரம், வீரம், செளரி, வெள்ளை, லிங்கம்
பஞ்சமித்திரம் – பேதிக்கச்செய்வது
பஞ்சமுகச்செடி – எலியாமணக்குச் செடி
பஞ்சமூலம் – சுக்கு, செவ்வியம், பேராத்தை, சித்தர்மூலம், திப்பிலிமூலம்
பஞ்சரச்செடி – புளியாரைச்செடி
பஞ்சரம் – பருத்தி
பஞ்சரிக்கொடி – அவரைக்கொடி
பஞ்சவர்ண அந்திமல்லி – பலவர்ணஅந்திமல்லிச் செடி
பஞசாங்குலச்செடி – ஆமணக்குச்செடி
பஞ்சாடுதங்ஐ – கொடியிலந்தை
பஞ்சாமிலச்செடி – இலந்தைச்செடி
பஞ்சாமுதம் – பழம், சருக்கரை, நெய், தேன், தேங்காய்ப்பூ
பஞ்சாயப்புல் – கோரைப்புல்
பஞ்சாலைப்பட்டை – பூவரசம்பட்டை
பஞ்சு – பருத்திநூல்
பஞ்சுநாளக்கொடி – அடப்பாங்கொடி
படகச்செடி – விஷ்ணுகரந்தைச் செடி
படங்கச்செடி – புறாமுட்டிச்செடி




