சித்த வைத்திய அகராதி 9501 – 9550 மூலிகைச் சரக்குகள்
பல்லினாற்குழலிக்கொடி – சவுரிக்கொடி
பல்லினாற்மரம் – ஆத்திமரம்
பல்லுகமரம் – பெருவாகைமரம்
பல்விளக்குமூலிகைகள் – ஆலவிழுது, வேப்பங்குச்சி, கருவேலங்குச்சி,
நாயுருவி வேர், பூலா
பவநாதிக்கொடி – பசளைக்கொடி
பவளக்குறிஞ்சாச்செடி – செங்குறிஞ்சாச்செடி
பவளக்குறுந்தஞ்செடி – செங்குறுந்தஞ்செடி
பவளக்குன்றிமணிக்கொடி – குண்டுமணிக் கொடி
பவளச யிண்டு – செவ்விண்டங்கொடி
பவளச் சருக்கரைவள்ளி – சிவப்புச்சருக்கரைவள்ளிக் கிழங்கு
பவளச்சோளம் – செஞ்சோளம்
பவளத்துத்தி – செநதுத்திச்செடி
பவள நெய்ச்சிட்டி – சிவப்புநெய்ச்சிட்டி
பவளப்புற்றுப்பாஷாணம் – பவளபாஷாணம்
பவளமல்லிகை – மரமல்லிகைச்செடி
பவளமனச்சிலை – மனோசிலை
பவளமூக்கரைச் சாரணை – சிவப்பு மூக்கரைச்சாரணைக் கொடி
பவளவகத்திமரம் – செவ்வகத்திமரம்
பவளவல்லிக் கொடி – சிவப்புஅல்லிக் கொடி
பவளவறுகு – செவ்வறுகுப்புல்
பவளவாருதிக் கொடி – சிறுசெண்பகந்கொடி
பவளவெலிச்செவிக்கீரை – சிவப்பெலிச்செவிக்கீரை
பவளகுமரப் பூண்டு – தீமுறிப்பூண்டு
பவித்திரியப்புல் – கருப்பைப்புல்
பவீகயமரம் – நிலவிளாமரம்
பழமுண்ணிப்பாலை – குளப்பாலைக் கொடி
பழமுண்ணியரிசி – மாதளைவிரை
பழம் – எலுமிச்சம்பழம்
பழம்பஞ்சிக்கிழங்கு – உருளைக்கிழங்கு
பழம்பட்டு – கிழிந்தபட்டு
பழம்பலாமரம் – பலாமரம்
பழம்பாசகம் – கருஞ்சீரகம்
பழம்பாசிக்கொடி – கொடிப் பாசி
பழம்பிசின் – சாலாம்பிசின்
பழம்புளி – கொறுக்காப்புளி
பழுபாகற்கொடி – காட்டுப் பழுபாகற்கொடி
பழுபாக்கு – கொட்டைப்பாக்க
பழுமரம் – ஆலமரம்
பழுவக்கொடி – காட்டவரைக்கொடி
பளிறம் – கற்பூரம்
பறங்கிக்கொடி – பூசணிக்கொடி
பறங்கிக்கொறுக்கைப் புளி – சீமைக்கொடுக்காப்புளி
பறங்கிச்சாம்பிராணி – பாற்சாம்பிராணி
பறங்கிச்சிலிப்பட்டை – பறங்கிப் பட்டை
பறங்கித் தாழை – அண்ணாசித்தாழைமரம்
பறங்கித்திராய் – பம்பந்திராய்
பறங்கிப் பட்டை – சீமை அந்திமந்தாரைப்பட்டை
பறங்கிப்பாஷாணம் – மேகநிறப்பாஷாணம்
பறங்கிப்பிச்சிச் செடி – சீனப்பிச்சிச் செடி




