HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 9551 - 9600 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9551 – 9600 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9551 – 9600 மூலிகைச் சரக்குகள்

பறங்கிப்பூகிணி – கோடைப்பூசிணிக்கொடி
பறங்கிப்பூரகிமரம் – ஒட்டுப்பலாமரம்
பறங்கி யாதளை – சிவப்பாதளைச் செடி
பறங்கியாதீதம் – பரங்கிப்பாஷாணம்
பறங்கி யாமணக்கு – சீமையாமணக்குச்செடி
பறட்டைக்கீரை – காட்டுக்கீரை
பறட்டைச்செடி – காட்டுக்கீரைச்செடி
பறந்தலைக்காடு – சுடுகாடு
பறம்பைமரம் – கருத்தாளிமரம்
பறவைவேந்தன்கொடி – கருடக்கொடி
பறிவைச்செடி – நந்தியாவட்டைச் செடி
பறுகிக் கற்றாழை – சீமைக்கற்றாழை
பறுணிகைக்கொடி – சீந்திற்கொடி
பறுணிச்சாராயம் – அரக்குச்சாராயம்
பறுணிச்செடி – சிறுகுமிழ்ச்செடி
பறுணிமரம் – பெருங்குமிழ்மரம்
பறைக்கொடி – வல்லாரைக்கொடி
பளைசீவிச்செடி – சிறுநன்னாரிச்செடி
பறைநீதச்செடி – வெள்ளையாதளைச்செடி
பற்களின் வலுவைக் குறைக்குமூலிகைகள் – முள்ளங்கிக் கிழங்கு,
பனிக்கட்டி, புளித்தபதார்த்தகம், அதிகச்சுடு
கையன்னம், இவைகளை உபயோகிக்க
பற்களின் பலத்தைக் குறைக்கும்
பற்களுக்கு வலுவைக் கொடுக்குமூலிகைகள் – தாதுமாதுளைப்பூ,
சுட்டகரி, கடுக்காய்த்தோல், சாரம்,
பாக்குச்சாரம், சீரகம், பன்னீர், கோரைக்கிழங்கு
ஏலம், மிளகு இவைகளை உபயோகிக்க
வலுவைக் கொடுக்கும்
பற்படாகம் – பற்படகம்
பற்படிகச்செடி – சிவப்பாதளைச்செடி
பற்பராகக் கொடி – தாமரைக் கொடி
பற்பரிச்செடி – தைவேளைச்செடி
பற்பருகக்கல் – மாக்கல்
பற்பாசகச்செடி – கருந்தகரைச் செடி
பற்பாறைப்பூ – செங்காந்தட்பூ
பனங்கட்டி – பனைவெல்லம்
பனங்கள்ளு – பனம்பால்
பனங்கற்கண்டு – சிவப்புகற்கண்டு
பனங்கற்றாழை – கருங்கற்றாழை
பனங்கோவை – அப்பைக்கோவை
பனசக்கொடி – பாற்சொற்றிக்கொடி
பனசப்பாசிக்கொடி – பழம்பாசிக்கொடி
பனசமரம் – பலாமரம்
பனசயக்காய் மரம் – கருங்கடுக்காய்மரம்
பனசயித்திமரம் – அரசுமரம்
பனந்தாழை – பூந்தாழைமரம்
பனரைக்கொட்டான் விரை – நெய்க்கொட்டான்
பனிக்கஞ்சிக்கொடி – தாமரைக்கொடி
பனிச்சகாக்கோரை – கஞ்சாங்கோரை
பனிச்சக்காய் – சீமைப்பரிணிக்காய்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments