சித்த வைத்திய அகராதி 9651 – 9700 மூலிகைச் சரக்குகள்
பாடிகாக்குழம்பு – சந்தனம்
பாடிசக்கோரை – பெருங்கோரை
பாணம்பழைச்செடி – குறிஞ்சாச்செடி
பாணவிக்கொடி – தட்டைபயற்றின்கொடி
பாணன்செடி – காட்டாமணக்குச்செடி
பாணி – தண்ணீர்
பாணிதம் – கருப்பஞ்சாறு
பாணிப்பூ – இலுப்பைப்பூ
பாணியக்கொடி – தண்ணீற்கொடி
பாணிவிருட்சம் – தென்னைமரம்
பாண்டில்மரம் – வாகைமரம்
பாண்டுகச்செடி – சிறுபூளைச்செடி
பாண்டுகமரம் – கருந்தேற்றாமரம்
பாண்டுநாசனிமரம் – பேயத்திமரம்
பாண்டுலாக்கொடி – கறிப் புடோற்கொடி
பாண்டுவாமச்செடி – புறா முட்டிச்செடி
பாதசத்துவமரம் – அரசமரம்
பாதரசம் – சூதம்
பாதிரிமரம் – பாடலிமரம்
பாதரோகணமரம் – அரசமரம்
பாதவப்பூடு – மலைதாங்கிப் பூடு
பாதாளமூலி – ஆடுதீண்டாப் பாளை
பாதாளவட்டிப்புல் – பூனைப்புல்
பாதிரிமரம் – மலையாத்திமரம்
பாதுகக்கொடி – பெருஞ்செருப்படைக்கொடி
பாத்தபச் செடி – புறாமுட்டிச் செடி
பாத்தியற்கிழங்கு – தண்ணீர்விட்டான் கிழங்கு
பாத்திரகிமரம் – பூம்பாதிரிமரம்
பாத்திரிகாமரம் – மருதுமரம்
பாப்புரிமாதளை – கொம்மட்டிமாதளை
பாமநவரிசி – வாலுளுவையரிசி
பாமதுவாச்செடி – ஆடாதோடைச்செடி
பாம்புகொல்லி – கெந்தகம்
பாம்புகொல்லிப்பூண்டு – கீரிப்பூண்டு
பாம்புக்கண்ணிச் செடி – சங்கங்குப்பிச் செடி
பாயசக்கொடி – பாற்சொற்றிக் கொடி
பாய்க்கோரை – பெருங்கோரை
பாய்ச்சுகண்டிமரம் – வசுவாசிமரம்
பாய்விரிக்கொடி – பசளைக்கொடி
பாரங்கு – சிறுதேக்கு
பாரசிகைமரம் – கருவத்திமரம்
பாரி – கோட்டம்
பாரிக்கைவரிச் செடி – பெருநாகதாளிச் செடி
பாரிசாதமரம் – பவள மல்லிகைமமரம்
பாரிண்டிவேம்பு – சிவனார்வேம்பு
பாரிபத்திரமரம் – வேப்பமரம்
பாரிபாசமரம் – குடைவேல்மரம்
பாரியக்காய் – கடுக்காய்
பாரிவர்ணச் செடி – முள்ளங்கிச் செடி
பாரையுப்பு – திருப்புணியுப்பு




