சித்த வைத்திய அகராதி 9751 – 9800 மூலிகைச் சரக்குகள்
பாற்சாதிகம் – தேங்காய்ப்பால்
பாற்சாம்பிராணி – மலாக்காச்சாம்பிராணி
பாற்சுரபிக்கொடி – பாலாட்டங்கொடி
பாற்சொற்றிக்கொடி – அம்மான் பச்சரிசி
பாற்பட்டைமரம் – அமுதுமரம்
பாற்பாதிக்கொடி – கொடிக்கள்ளி
பாற்பீர்க்குக்கொடி – வெள்ளைப் பீர்க்குக்கொடி
பாற்புரண்டி – பாற் கொரண்டிச் செடி
பாற்பூரிதச்செடி – எருக்கலைசெடி
பாற்பெரிச்செடி -சீவைச்செடி
பாற்பேவிகமரம் – கள்ளிமரம்
பாற்லியரிசி – வாட்கோமையரிசி
பானகாக்கொடி -பாலாந்தெள்ளுக்கொடி
பானரகொல்லி – பிளவைகொல்லிச்செடி
பானவியக்கீரை – காசினிக்கீரை
பானற்கொடி – கருங்குவளைகொடி
பானிக்கன்னிமரம் – பாற்பட்டை மரம்
பானியவல்லிக்கொடி – வலம்புரிக் கொடி
பானுபலைமரம் – வாழைமரம்
பிகவிமாமரம் – ஒட்டுமாமரம்
பிசகக்கொட்டை – எட்டிக்கொட்டை
பிசவியச்செடி – பருத்திச்செடி
பிசனமக்கொடி – காட்டுப் பழுபாகற்கொடி
பிசனம் – செஞ்சந்தனம்
பிசாகநெல் – மலைநெல்
பிசாசக்கரும்பு – பேய்க்கரும்பு
பிசாசுபோக்கிமரம் – காஞ்சிரைமரம்
பிசாசுப்பிரியமரம் – வேப்பமரம்
பிசாசுமாஞ்சில் – சடாமாஞ்சில்
பிசாசுமுள்ளிச் செடி – பைசாசமுள்ளிச்செடி
பிசிதமரம் – வேப்பமரம்
பிசினிமரம் – வேப்பமரம்
பிசினிச்செடி – பேய்த் துவரைச்செடி
பிசின் – மரப்பிசின்
பிசின்காபிகம் – விளாம்பிசின்
பிசின்பட்டை – மயிலாலக் கடிப்பட்டை
பிசுகச்செடி – வேலிப்பருத்தி
பிசுதூலச்செடி – பருத்திச்செடி
பிசுதேரிகப்புல் – சுனைப்புல்
பிசுமந்தமரம் – வேப்பமரம்
பிசுலமரம் – காட்டுப்புங்குமரம்
பிசூகக்கொடி – வேலிப்பருத்திக் கொடி
பிசேகச்செடி – காட்டுப்புகையிலைச் செடி
பிச்சிப்பூச்செடி – சாதிப்பூச்செடி
பிச்சிலாபச்செடி – இருள்வீட்டுச் செடி
பிச்சுமரம் – காஞ்சிரைமரம்
பிச்சுராவேர் – இருவேலிமரம்
பிஞ்சுக்கொடி – நாய்ப்பாலை கொடி
பிஞ்சடச்செடி – பூளைப்பூச்செடி
பிடங்குநாறிச்செடி – முடங்குநாறிச் செடி




