HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 1366 - 1370 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 1366 – 1370 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 1366 – 1370 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1366. நான்தானே போகரென்றேன்
காலாங்கிதம்மை நலமுடனே தானித்து தொழுதிட்டேனே
பாங்கான வென்மீதில்
கிருபைவைத்து பாகமுடன் யோகத்துக்குறுதிசொன்னார்
மான்தோலி லாசனத்திலிருந்து
மார்க்கமுடன் சித்தரைப்போ லுருவங்கொண்டு
மேன்மையுட னுபதேசம்
யாவும்பெற்று மேதினியில் பிழைக்கவென்று வந்திட்டேனே
விளக்கவுரை :
1367. வந்திட்டேன்
சீனபதிதன்னிற்சென்றேன் வாகுடனே கற்றதொருவித்தையெல்லாம்
தந்திட்டேன் மாணாக்கள்
பிழைக்கவென்று தாரணியி லெந்தனைமெச்சியேதான்
குந்திட்டேன்
சீனபதிமார்க்கமெல்லாம் குறிப்புடனே சாலமிகச்செய்தேன்யானும்
முந்திட்ட தேசாதிதேசமெல்லாம்
முயற்சியுடன்றான் திரிந்து வந்தேன்பாரே
விளக்கவுரை :

[ads-post]
1368. பாரேதான் விளக்கொளிதான் கையிலேந்தி
பாழ்கிணற்றில் செல்லுகின்ற பான்மைபோல
சீரேதான் சகலமுந்தானறிந்து
சீர்தப்பி இருட்டுவழி செல்லல்போல
நேரேதான சகலமுந்தானறிந்து
கெடிதான வித்தைகளைக் கற்றுமென்ன
கூரேதான் யோகத்தின்
மார்க்கங்காணார் குவலயத்தில் கோடிபேர் காணலாமே
விளக்கவுரை :
1369. காணலாம் காயாதிகற்பங்கொண்டோர்
காசினியில் விழலாகப்போனபேர்கள்
மாணவே சிவயோகந்தன்னிற்சென்று
மாண்டிறந்தோர் கோடானகோடிபேர்கள்
தோணாத சரக்கெடுத்துச்
சுழலைநடந்து கொல்லுலகில் மாண்டவர்கள் கோடாகோடி
காணவே சாத்திரங்கள்
பார்த்துக்கெட்டு நலமழிந்து குறுக்குவழி போவார்தாமே
விளக்கவுரை :
1370. தாமேதான் நாகமது பலமேவாங்கி
தாக்கான யிலுப்பைநெய்யில் வுருக்கிச்சாய்த்து
நாமேதான் கெந்தியொரு
பலமேவாங்கு நலமான ரசமதுதான் பலமேதூக்கு
வேமேதான்
பழச்சாறுதன்னாலாட்டி விருப்பமுடன் தானரைத்துக் கவசஞ்செய்து
போமேதான் ரவிதனிலே காயப்போடு
பொங்கமுட னோட்டிலிட்டு சீலைசெய்யே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments