HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 1461 - 1465 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 1461 – 1465 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 1461 – 1465 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1461. பொன்னான மட்டமுடன்
நாலுக்கொன்று பொலிவான தங்கமது வொன்றுசேர்க்க
மன்னானமன்னர்மெச்சும்
பொன்னேயாச்சு மகத்தான வேதையிது சித்தர்வேதை
வன்னான ரிஷிமுனிவர்
செய்யும்வேதை வாகுடனே மாணாக்கள் பிழைக்கவென்று
தென்னானா னுங்களுக்குத்
தெளிவாகத்தான் பாடிவைத்தேன் தெளிவைப்பாரே
விளக்கவுரை :
1462. தெளிவான வாதவித்தை வதீதமெத்த
தேசத்தில்கிட்டாது சிவயோகிக்கு 
ஒளிவான சித்தரெல்லாம்
மறைத்துவைத்தார் ஓகோகோநாதாக்கள் சூதார்கண்டார்
நெளிவான சாத்திரத்தின்
மறைப்புமார்க்கம் நேர்மையட நானுரைத்த பாவனைப்போல்
வழியாகச் சொன்னவர்க
ளாருமில்லை வையகத்தில் போகரைப்போ லாவார்தானே
விளக்கவுரை :

[ads-post]
1463. தானான பிரமவித்தை
யறியவேண்டும் சதாகாலஞ் சமாதியிலே நிற்கவேண்டும்
கோனான குருவருளைக்
காணவேண்டும் காணாட்டால் காயுமில்லை பூவுமில்லை
வேனான பரஞ்சுடரை நிர்த்தம்
நிர்த்தம் விரும்பியே பேரின்பங் காணவேண்டும்
பானான காயசித்தி யோகசித்தி
பாங்கான குளிகையுள சித்துதானே
விளக்கவுரை :
1464. காணவே வண்டபகிரண்டமெல்லாம்
கடிதான வடிமூலங்காணவேண்டும்
பூணவே பூரணத்தையறியவேண்டும்
போக்கான வஸ்துவெல்லாங் காணவேண்டும்
தோணவே கழுத்திலே
நிற்கவேண்டும் சூட்சமு னாடெல்லா மறியவேண்டும்
வேணவே வம்பரத்தை நாடவேண்டும்
வெட்டவெளி சின்மயத்தைக் கூடநன்றே
விளக்கவுரை :
1465. கூடவே மனந்தேறி நிற்கவேண்டும் குவலயத்தில் துரியம்விட்டு பிரியவேண்டும்
நாடவே நடுமையமேறல் வேண்டும்
நாதாக்கள் கூத்தெல்லாங் காணவேண்டும்
தேடவே வாலைதனைக் காணவேண்டும்
தெளியாத மூன்றெழுத்தைப் பற்றவேண்டும்
நீடவே சிதானந்த வறிவில்நின்று
நிட்களமாய் மேலவரைப்போகநன்றே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments