HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 1491 - 1495 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 1491 – 1495 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 1491 – 1495 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1491. எட்டான மாற்றதுவுமென்ன
சொல்வேன் பெருவான பசுமையது மிகவேகாட்டும்
நாட்டான சூதமது லெகுவிலோடும்
கசடகற்றி மாற்றதுவுங் காணலாகும்
மாட்டான பொன்னதுவில்
நாலுக்கொன்று மாட்டடா தங்கமது ஒன்றுகூட்டு
திட்டான வாரடித்துப்
புடத்தைப்போடு திகழான பசுந்தங்கம் சொல்லப்போமோ
விளக்கவுரை :
1492. சொல்லவென்றால் நாவில்லை
பாவமில்லை சூட்சாதிசூட்சமெல்லாம் சூதத்தாட்டு
மெல்லவே
ஜீவனத்தைசெய்துகொண்டு மேதினியில் யோகத்துக்குருதிபாரு
வல்லவே ஞானத்தைமிகவே
வுன்னிவழியான முனைமூலத்துள்ளேபுக்கி
கொல்லவே ஓங்காரமுள்ளடக்கி
குறிப்புடனே சமாதிநிலை யறிந்துபோற்றே
விளக்கவுரை :

[ads-post]
1493. போற்றவே சிகாரத்தின்
மீதிருந்து பொலிவாக மகாரத்தை யுன்னிப்பாரு
ஆற்றவே வகாரமா மனாதிபீடம்
அப்பனே நகாரமாம் பிரம்மபீடம்
தூற்றவே யகாரமாம்
லட்சுமிபீடம் துலையாத கர்மேந்திரியம் ஐந்துக்குள்ளே
மாற்றவே மனோலயத்தை
மருவிப்பாரு மகத்தான நாதாக்க ளாடுங்கூத்தே
விளக்கவுரை :
1494. கூத்தான பஞ்சகர்த்தா
ளாடுங்கூத்து குடியான வீட்டுக்குள் ஐந்துபேராம்
காத்தான வாசலது வொண்பதாகும்
கருவிகாணாதிமுதல் பொந்துக்குள்ளே
மாத்தானும் வந்தவுடன்
சாமிபூணும் மகத்தாக திரேகமது பொய்யாம்பாரு
ஆத்தாளை வணங்கி மிகவனுசித்து
அப்பனே சாயுச்சிப் பதத்தைத்தேடே
விளக்கவுரை :
1495. தேடையிலே மின்னமொரு
மார்க்கங்கேளு வெளியான வெள்ளிவித்தை யார்தான்காண்பார்
வாடையுள்ள பாஷாணம்
பலமொன்றாகும் வகுப்பான கோழஇயென்ற மூலிதானும்
மேடையிலேதான் விலையும்
மூலியப்பா மேன்மையுடன் கொண்டுவந்து சாற்றைவாங்கி
ஆடையிலேதான் பிழிந்து
மைந்தாகேளு அப்பனே நாற்சாமம் சுருக்குதாக்கே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments