HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 1496 - 1500 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 1496 – 1500 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 1496 – 1500 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1496. தாக்கவே பாஷாணம் புகையடங்கி
சார்புடனே கட்டியது பொருமிக்கொல்லும்
நோக்கவே பூநீறு வுப்பெடுத்து
நுணுக்கமுடன் தான்சேர்த்து கவசஞ்செய்து
போக்கவே ரவிதனிலே காயவைத்து
பொங்கமுடன் சுண்ணாம்புசீலைசெய்து
பார்க்கவே சட்டிதனில்
மணல்தான்கொட்டிபாங்காக நடுமையம் வைத்திடாயே
விளக்கவுரை :
1497. வைத்துமே சட்டிகொண்டு மேலேமூடி வாகுடனே மண்சீலைவலுவாய்ச் செய்து
பொய்த்துமே போகாமல்
வடுப்பிலேற்றி புகழாகத் தானெரிப்பாய் நாலுசாமம்
கைத்துமே யாறினபின்
னெடுத்துப்பாரு கனமான பாஷாணம் முருக்கிக்கட்டும்
மெய்த்துமே கட்டினதோர்
பாஷாணத்தில் மேன்மையுடன் வங்கமது காலாய்க்கூட்டே
விளக்கவுரை :

[ads-post]
1498. கூட்டியே வங்கத்தோர்
நிடைதானாகம் குமுறவே வறுவகைஜெயநீர்தன்னால்
தாட்டிகமாய் தானரைப்பாய்
நாலுசாமம் சார்பாக பில்லைதட்டிக் காயவைத்து
நீட்டமுடன் வோட்டிலிட்டுச்
சீலைசெய்து நேர்பாக காடையென்ற புடத்தைப்போடு
வாட்டமுடன் கோழியென்ற
புடந்தானாகும் மைந்தனே தீயாறியெடுத்துப்பாரே
விளக்கவுரை :
1499. எடுக்கவே பற்பமது
என்னசொல்வேன் என்மைந்தா நாதாக்கள் செய்யும்வேதை
கொடுக்கவே செம்புதனில்
கொடுத்துப்பாரு சொக்கமுள்ள வெள்ளியது கூறப்போமோ
மடுக்கவே பத்துக்கொன்று
வெள்ளி மார்க்கமுடன் தானுருக்கிக் கொடுத்துப்பாரு
விடுக்கவே வுப்புக்குக்
காய்ப்புண்டாகும் விபரமுடன் செய்யம் வழியறிந்துபாரே
விளக்கவுரை :
1500. பார்க்கவே நாதாக்கள்
கைமறைப்பு கருவாளி கண்டறிவான் மற்றோர்காணார்
ஏர்க்கவே யவர்களிடம்
தொண்டுசெய்து என்மகனேயவர்கள் மனங்களியவேண்டும்
பூர்க்கவே மனதுவந்து
வுந்தனுக்கு புகழ்ச்சியுடன் வேதைமுகம் யாவுஞ்சொல்வார்
தீர்க்கவே
சாத்திரங்களுமுரைப்பார் தீர்க்கமுட னறிபவனே சித்தனாமே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments