HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 1501 - 1505 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 1501 – 1505 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 1501 – 1505 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1501. சித்தனாமின்னமொரு
மார்க்கங்கேளு சிவப்பான சாரமது கட்டுசொல்வேன்
நித்தமுடன் காரமது
வொன்றேயாகும் நிகரான சீனமது வொன்றேயாகும்
துத்தமுடன்
பூநீறுவொன்றேயாகும் துடியான சிப்பியென்ற தண்ணந்தானும்
முத்தமுடன் சிப்பியுட
ஜெயநீர்தன்னால் மூன்றுநாளரைத்து பாவகமேசெய்யே
விளக்கவுரை :
1502. செய்யவே மெழுக்காலே
குகையுண்டாக்கி செழிப்புடனே சாரமதுக்கங்கிபூட்டி
நையவே சுண்ணாம்பு சீலைசெய்து
நலம்பெறவே ரவிதனிலே காயவைத்து
முய்யவே முழப்புடந்தான்
பூப்புடந்தான் முனையான மணல்தனிலே நடுவேவைத்து
பையவே மணலாலே மேலேமூடி பாங்குபெற
தீமூட்டி போட்டிடாயே
விளக்கவுரை :

[ads-post]
1503. போடவே தீயாறியெடுத்துப்பாரு
பொங்கமுடன் சாரமது கட்டிப்போகும்
நீடவே முப்புமிப்படியேதீறு
நிலையான சாரமது தந்தம்போலாம்
நீடவே சாரணைதான்
சொல்லக்கேளாய் கொடிதான நாயுருவி சாம்பல்தன்னில்
மூடவே சாரமதை யுள்ளேவைத்து
முழுகவே சாம்பலையும் மேலேபோடே
விளக்கவுரை :
1504. போடவே சட்டிதனில்
பொதிந்துமூடி பொங்காமல் சீலையது வலுவாய்ச் செய்து
சூடவே தணல்மூட்டி
மூன்றுநாளாய் சுகம்பெறவே தானெரிப்பாயஃ மைந்தாகேளு
தூடவே யாறினபின்
னெடுத்துப்பாரு துடியான சாரமதுக் கிணைவேறுண்டோ
ஆடவே சாரமதை யென்னசொல்வேன்
அப்பனே கருவாளி சொல்வான்பாரே
விளக்கவுரை :
1505. பாரேதான் சாரமது கட்டுமானால்
படுமுன்னே சரக்கெல்லாம் கட்டிப்போடும்
நேரேதான் நாகமதை
நொடியிற்கொல்லும் நேரான செம்பதுவு மூறல்போகும்
சீரேதான் சாரமது கட்டுமானால்
சிறப்பான வீடுகளும் கட்டினாற்போல்
கூரேதான் சரக்குதான்
காலனாகும் கொடிதான சாரத்தின் நேர்மைபாரே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments